Wednesday, December 25, 2013

பள்ளிகளுக்கு இடையே வகுப்பறை கல்வி இணைப்புத் திட்டம் செயலாக்கம் - எமது பள்ளி தேர்வு.



பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசு பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் (Collaborative Learning through Connecting Class Room across Tamil Nadu)  செயல்படுத்தப்பட உள்ளது.


மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முன்னோடிப் பள்ளிகளில் நடைபெறும் வகுப்பறைக் கல்வியை மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையிலும், சிறப்புப் பயிற்சி பெறுவதற்கும், பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையே வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வோர் மாவட்டத்திலும் முன்னோடி பள்ளிகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு அகன்றகற்றை இணைய இணைப்பு மற்றும் வெப் கேமரா வழங்கப்படுகிறது.

முன்னோடி பள்ளிகளில் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை வெப் கேமரா மூலம் கணினியில் பதிவு செய்து, மற்ற பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் காணும் வகையில் ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்படுள்ளது. வகுப்பறை இணைப்புத் திட்டத்துக்கு, மாவட்டத்தில் 4 அரசு நடுநிலைப் பள்ளிகள், 4 அரசு உயர் நிலைப் பள்ளிகள்  முன்னோடி பள்ளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட முன்னோடி பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் கணினி இயக்குபவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், வகுப்பறைக் கல்வி இணைப்புத் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இப்பட்டியலில் எமது பள்ளியான ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் பள்ளியும் தேர்வு செய்யப்பெற்றுள்ளது குறித்து மிக்க மகிழ்வெய்துகிறேன். அதற்கான பயிற்சிப்பட்டறை வரும் 30.12.2013 அன்று கோவை செல்கிறேன்.

No comments:

Post a Comment