Thursday, February 13, 2014

தமிழக பட்ஜெட் சில துளிகள்...

Photo: தமிழக பட்ஜெட் சில துளிகள்...

தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 பட்ஜெட் தாக்கல்
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2014 - 2015 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

திமுக வெளிநடப்பு: தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ரூ.60 கோடியில் மீன்பிடித் துறைமுகம்:

தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணம் மீன்பிடித் துறைமுகம் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும். 

காவல்துறைக்கு ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு:

காவல்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.5,186.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கு ரூ.499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ரூ.1,260 கோடி செலவில் 60 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டப்படும்.

தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த சென்னையில் அக்டோபரில் சர்வதேச முதலீட்டார்கள் மாநாடு நடத்தப்படும்.

ரூ. 100 கோடி செலவில் 118 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னையில் ரூ.105 கோடியில் 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.

சாலை கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 2,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9,235 கிலோ மீட்டர் கிராம சாலைகள் ரூ. 2,308 கோடியில் தார் சாலையாக மாற்றப்படும்.

காவல்துறைக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.572 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு படைக்கு இயந்திரங்கள் வாங்க வரும் நிதியாண்டில் ரூ.189.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறைகளில் தொழிற்கூடங்களை மேம்படுத்த ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலை பாதுக்காப்புத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.215 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டு தொகையில் ரூ.65 கோடி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்தப்படும்.

விபத்துப் பகுதிகளைக் கண்டறிந்து திருத்தப் பணியை மேற்கொள்ள ரூ.300 கோடியில் திட்டம்

ரூ.300 கோடி திட்டத்துக்கு 2014-15ம் ஆண்டில் ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இரண்டாவது பசுமைப் புரட்சி திட்டம் பலன் தர தொடங்கி உள்ளது.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.323 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை துறைத் திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும்.

கரும்பு சாகுபடி திட்டத்துக்கு 12,500 ஏக்கர் பரப்பு விரிவுபடுத்தப்படும்.

2014-15-ல் கூட்டுறவு அமைப்புகள் மூலம் ரூ.5000 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு.

பயிர்க்கடனை குறித்த காலத்துக்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.

வட்டி சலுகைகள் அளிக்க ரூ.200 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னையில் 10 இடங்களில் நகர்ப்புற பொதுச்சேவை மையங்கள் துவங்கப்படும்.

நகர்ப்புற பொதுச்சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைப்பார். 

சென்னை மாநகராட்சியில் 200 பொதுச்சேவை மையங்கள் தொடங்கப்படும்.

இதர மாநகராட்சிகளிலும் பொதுச்சேவை மையம் விரைவில் தொடங்கப்படும்.

நீர்ப்பாசன துறைக்காக ரூ.3,669 கோடி வரும் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

104 அணைகளில் புனரமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

28 அணைகளில் நீரியல் ஆய்வுகள் நிறைவடைந்துவிட்டன.

வரும் நிதியாண்டில் அணை புனரமைப்பு திட்டத்துக்கு ரூ.329.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஆண்டில் 1500 கி.மீ. நீள சாலைகள் அகலப்படுத்தப்படும்.

3500 கி.மீ. நீள சாலைகளை மேம்படுத்தவும் வரும் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திட்டத்துக்கு ரூ.684 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை வெளிவட்ட சாலை முதல் காட்டப் பணி ரூ.1081 கோடியில் மேற்கொள்ளப்படும்.

வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டப் பணி ரூ. 1075 கோடியில் மார்ச்சில் தொடங்கும்.

சாலை மற்றும் பாலம் திட்டத்திற்காக ஜப்பான் நிறுவனத்திடம் ரூ.2000 கோடி நிதியுதவி பெறப்படும்.

35 லட்சம் குடும்பத்துக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.

விலையில்லா பொருட்களுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இளைஞர் திறன் மேம்பாடு

காஞ்சி மாவட்டம் ஒரகடத்தில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் இயங்குகிறது.

வரும் ஆண்டில் இரு இடங்களில் இளைஞர் திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

நெல்லை, கங்கைகொண்டான், திருவள்ளூர், தேர்வாய்க்கண்டிகையில் மையங்கள் அமைக்கப்படும்.

சுகாதாரத்துறை

வரும் நிதிஆண்டுக்கு சுகாதாரத்துறைக்கு ரூ.7,005.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.76.13 கோடி செலவில் 64 ஆரம்ப சுகாதார மையங்கள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்த முடிவு

தற்போது உள்ள 100 நகர்புற சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்

9 மாநகராட்சிகள், 77 நகராட்சிகளில் 37 புதிய நகர்புற சுகாதார மையங்கள் வலுப்படுத்தப்படும்.

தற்போது உள்ள 243 நகர்புற சுகாதார மையங்கள் மேம்படுத்தப்படும்.

770 நடமாடும் மருத்துவ குழுக்குள் அமைக்கப்படும்

தேசிய ஊராக சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் ரூ.1,400 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ரூ.757.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை, நெல்லையில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை மையத்துடன் கூடிய பன்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறப்பு பிரிவுகளுக்கான ரூ.75 கோடியில் ஒரு புதிய பல மாடி கட்டிடம் கட்டப்படும்.

ரூ.14 கோடி செலவில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மேம்படுத்தப்படும்.

ரூ.91 கோடி செலவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் புதிதாக புற நோயாளிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா கட்டமைப்பு

சுற்றுலா துறைக்கு வரும் நிதி ஆண்டுக்கு ரூ.178.51 கோடி நிதி ஒதுக்கீடு

சுற்றுலா கட்டமைப்பு முதலீட்டு திட்டத்திற்கு வரும் நிதி ஆண்டில் ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு.

பல்வேறு திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.751.09 கோடி நிதி ஒதுக்கீடு.

உழவர் பாதுக்காப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு வரும் நிதி ஆண்டில் ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு.

No comments:

Post a Comment