Tuesday, October 8, 2013

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு - 2013 முடிவுகள்

        முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு - 2013 முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் 

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
FINAL ANSWER KEY


Botany Physical Education Director Grade I
Zoology Micro - Biology
History Bio - Chemistry

தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் - ஊதியம் தெளிவுரை

         தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய அரசாணைக்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

          TN GOVT LTR NO.54966 / PAYCELL / 2013-1, DATED.03.10.2013 - Tamil Nadu Revised Scales of Pay Rules, 2009 – Grant of one additional increment of 3 percent of basic pay to the employees on award of Sel ection Grade/ Special Grade in the revised scales of pay – Clarifications – Regarding.

நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பயிற்சி

இணையத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


          1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.


          எனவே, இணையத்தில் எதை செய்யலாம், செய்யக்கூடாது என்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேருக்கு இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த பயிற்சி அக்டோபர் மாத இறுதியில் வழங்கப்பட உள்ளது என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

              இணையக் குற்றங்கள் தொடர்பாக பாடங்களில் சில பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இருந்தாலும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையப் பாதுகாப்பு தொடர்பாக முதல்முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

                இணையப் பாதுகாப்பு, இணையக் குற்றங்கள், குழந்தைகளின் உரிமைகள், தவறான நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவை தொடர்பாக இதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

            மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் அனைவருக்கும் கல்வித் திட்டம் ஆகியவை இணைந்து இந்தப் பயிற்சியை நடத்துகின்றன.

                காவல்துறை அதிகாரிகள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (அக்.8), நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமையும் (அக்.10) மாநில அளவில் பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மொத்தம் 240 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என கண்ணப்பன் தெரிவித்தார்.

          இந்த 240 ஆசிரியர்களும் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பயிற்சியை வழங்குவார்கள். அவர்களின் மூலம் அனைத்து ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வுப் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

                ஒவ்வொரு பள்ளியிலும் இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ள நிலையில் இந்தப் பயிற்சி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saturday, October 5, 2013

எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை மேற்கொள்வதற்கான அறிவுரைகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - 2013-2014 ஆம் ஆண்டிற்கான எளிமைப் படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றலை மேற்கொள்வதற்கான அறிவுரைகள்

Friday, October 4, 2013

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய வசதி

கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஒரே நொடியில் அறிய ஆன்லைன் வசதி


            கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஒரே நொடியில் அறிந்திட ஆன்லைன் வசதியை அரசு தேர்வுத்துறை செயல்படுத்த இருக்கிறது. இதுவரை 2 கோடி பழைய சான்றிதழ்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.

சான்றிதழ் உண்மையானதுதானா?

          எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவையா (ஜென் யூனஸ்) என்பதை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்க ளிடமிருந்து அரசு தேர்வுத் துறைக்கு அனுப்பப்படும்.

         அந்த சான்றிதழ் நகலை தன்வசம் உள்ள ஆவணங்களுடன் ஒப்பிட்டு தேர்வுத்துறை ஆராய்ந்து அறிக்கை அனுப்பும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சில மாணவர்கள் போலி பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தது இத்தகைய ஆய்வின் மூலம்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கால தாமதம்

          ஒருவர் அரசு பணியிலோ அல்லது ஆசிரியர் பணியிலோ சேரும்போது கல்வித்தகுதிக்கேற்ப அவரது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, இடைநிலை ஆசிரியர் பயிற்சி சான்றிதழ்கள் தேர்வுத் துறைக்கு அனுப்பி ஆய்வு செய்யப்படும். இதைப்போல, பட்டப் படிப்பு சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்படும்.

          ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 20 லட்சம் பேர் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, சிறப்பாசிரியர் பயிற்சி, இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடிக்கிறார்கள். அவர்களின் சான்றிதழ்களை ஆவணங்களுடன் சரிபார்த்து உண்மைத்தன்மையை உறுதி செய்ய தேர்வுத் துறைக்கு அதிக காலம் பிடிக்கிறது.

நொடியில் சரிபார்க்க ஆன்லைன் வசதி

          சான்றிதழ் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆய்வு செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதனால் அதிக காலதாமதம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது.

              இதற்கிடையே, அரசு மற்றும் ஆசிரியர் பணியில் சேருவோரின் சான்றிதழ்களையும் சரிபார்த்து அனுப்ப வேண்டும்.இதையெல் லாம் கருத்தில் கொண்டு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன் மையை மிக விரைவாக சரிபார்க்கும் வகையில் ஆன்லைன் வசதி திட்டத்தை தேர்வுத் துறை கொண்டுவர உள்ளது.

இதன்படி, அனைத்து கல்விச்சான்றிதழ்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு ஒரே நொடியில் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்துவிட முடியும்.

டிஜிட்டல் மயம்

           ஆன்லைன் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் 1955-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரையிலான கிட்டத்தட்ட 2 கோடி பழைய சான்றிதழ்கள் கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல்மயமாக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சான்றிதழ்கள் முழு வீச்சில் ஸ்கேன் செய்யப்பட்டு வருவதாகவும் அரசு தேர்வுகள் இயக்குனர் கே.தேவராஜன் தெரிவித்தார்.

               அனைத்து ஆண்டுகளுக்குரிய சான்றிதழ்களும் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப் பட்டுவிட்டால் சான்றிதழின் உண்மைத்தன்மையை ஒரு நொடியில் சரிபார்த்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

           இதனால் தேவையற்ற கால தாமதம் தவிர்க்கப்பட்டு மேற்படிப்பு படிக்கும் மாணவர்களும், அரசு பணியில் சேருவோரும் பெரிதும் பயன்பெறுவார்கள்.

Tuesday, October 1, 2013

தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து: மறுதேர்வு நடத்த உத்தரவு

          முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வில், அச்சுப்பிழையுள்ள கேள்விகள் இடம்பெற்றதால், அதை ரத்து செய்த மதுரை ஐகோர்ட் கிளை, மறு தேர்வு நடத்த உத்தரவிட்டது.
         மதுரை புதூர் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனு: முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், ஜூலை 21 ல், தேர்வு நடந்தது. &'பி&' வரிசை வினாத்தாள்களில் சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுத, 150 கேள்விகள் இருந்தன; இதில், 47 கேள்விகளில், அச்சுப்பிழைகள் உள்ளன. அச்சுப்பிழை கேள்வி விடைகளுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டும். தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
          ஏற்கனவே, வழக்கு விவாதத்தின் போது நீதிபதி, "தேர்வு முடிவை வெளியிட தடை விதிக்கப்படுகிறது. இதில், 8002 பேருக்கு, அச்சுப்பிழையுள்ள வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. மறுதேர்வு நடத்துவது குறித்து, அரசிடம் விவரம் பெற்று தெரிவிக்க வேண்டும்" என்றார்.
           "மொத்தம் 150 வினாக்களில், 40 வினாக்கள் பிழையாக உள்ளன. பிழையான வினாக்களை நீக்கி விடுகிறோம். மீதம், 110 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்" என டி.ஆர்.பி.,சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று, நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் ஜெ.ஜெயகுமாரன் ஆஜரானார்.
           மொத்தம், 150 வினாக்களில், &'பி&' வரிசை வினாத்தாளில் பிழையான, 40 வினாக்களுக்கு, கருணை மதிப்பெண் வழங்கலாம். &'பி&' வரிசை வினாத்தாளின்படி பதில் எழுதியவர்களுக்கு, மொத்தம், 110 மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம். இதேபோல், அனைத்து (ஏ,சி,டிவரிசை) வினாத்தாள்படி தேர்வு எழுதியவர்களுக்கும், 110 மதிப்பெண் அடிப்படையில், மதிப்பீடு செய்து, முடிவை வெளியிடலாம். தேர்வை ரத்து செய்யத் தேவையில்லை என, அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
           தேர்வு எழுதியவர்களுக்கு, டி.ஆர்.பி., அநீதி இழைத்துள்ளது. போட்டித்தேர்வில், அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். கருணை மதிப்பெண், 40 வழங்கினால், அந்த வினாக்களை எழுதியவர்கள் மட்டும் பயனடைவர். மொத்த மதிப்பெண்ணை, 110 ஆக குறைத்து, விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால், தேர்வின் நோக்கம் நிறைவேறாது. இதற்கு ஒரே தீர்வு, மறு தேர்வு நடத்துவது தான். இவ்வாறு, முடிவெடுக்கும் நிலைக்கு, என்னை டி.ஆர்.பி., தள்ளியுள்ளது.
           இதபோல், டி.ஆர்.பி.,க்கு எதிராக, 2012ல், ஒரு வழக்கு வந்தது. "வரும் காலங்களில், வினாத்தாளில் பிழை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளப்படும்" என டி.ஆர்.பி.,உறுதியளித்தது. அதை டி.ஆர்.பி., காப்பாற்றவில்லை. தற்போது, அரசுத்தரப்பு பரிந்துரையால், நன்றாக தேர்வு எழுதியவர்களும் பாதிக்கப்படுவர். ஜூலை 21ல் நடந்த தமிழாசிரியர் நியமன தேர்வு ரத்து செய்யப்படுகிறது. டி.ஆர்.பி., விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டும்.
             ஏற்கனவே பயன்படுத்திய, ஹால்டிக்கெட்டுகளை ஆன்-லைன் மூலம் வழங்கலாம். புதிதாக விண்ணப்பங்கள் வினியோகித்து, அதன் அடிப்படையில் யாரையும் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு

                    அக்டோபர் மாதம் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மையங்களில் நடத்தப்பட உள்ள ""சமூக விழிப்புணர்வு மற்றும் பல்லூடக பாதுகாப்பு"" சார்ந்த மாநில கருத்தாளர்களுக்கான பயிற்சி சென்னையில் நடைபெறுகிறது