Monday, October 5, 2015

ஜேக்டோ வேலை நிறுத்தப் போராட்டம் விளக்கக் கூட்டம்...


          வரும் 08.10.2015 அன்று நடைபெற உள்ள ஜேக்டோவின் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாகவும், அப்போராட்டம்  வெற்றி பெறும் வகையிலும் எவ்வாறு செயல்பட வேண்டுமெனவும் இன்று ஊத்தங்கரை ஒன்றியத்தில், அனைத்து துவக்க நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இன்று  விரிவாக விளக்கி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டப்பட்டது.









Thursday, September 24, 2015

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்...........


            இன்று (23.09.2015) தமிழக ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றது. 

        மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு  தலைமை வகித்து பேசிய மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள், இன்றைய கூட்டத்தின் அவசியம் பற்றியும், வரும் 08.10.2015 அன்று நடைபெறவுள்ள ஜேக்டோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் நமது தீவிரமான பங்களிப்பு பற்றியும் விரிவாகப் பேசினார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். 
           அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
                        நமது மாவட்டத்திற்கு புதிதாக வந்து பொருப்பேற்றுள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு பாபு அவர்களை வரவேற்று, அவரின் பணி சிறக்க தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக்கிளை வாழ்த்தி வரவேற்கிறது.
தீர்மானம் : 2.
               வரும் 08.10.2015 அன்று ஜேக்டோ சார்பில் நடைபெற உள்ள மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்தத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி முழிமையாக பங்கேற்று போராட்டத்தை வெற்றிபெறச் செய்தல்.
தீர்மானம் : 3.
                   அகில இந்திய அளவில் எந்த இயக்கமும் இதுவரையில் வெளியிடாத அளவிற்கு 1152 பக்கங்களில் (சுமார் 4.5கி.கி.எடை) நமது  அரசாணை புத்தகத்தை உரிய தொகை செலுத்தி அக்டோபர் மாதத்திற்குள் பெறல்.
தீர்மானம் : 4.
                 2015க்கான உறுப்பினர் தொகை இன்னும் செலுத்தாத வட்டாரங்கள் உடன் செலுத்துதல்.
         கூட்டத்தில் மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு. து. மனுநீதி, மாவட்டப் பொருளாளர் திரு நவீத் அக்பர் உள்ளிட்ட அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும் கல்ந்துக்கொண்டனர்.






Friday, September 18, 2015

கொடுப்பதில் மகிழ்வு வாரம் ........

    அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் அக்டோபர் 2 முதல் 8 வரை "JOY OF GIVING WEEK" எனும் ”கொடுப்பதில் மகிழ்வு வாரம்” கொண்டாட பள்ளி கல்வித் துறைச்  செயலாளர் திருமதி சபீதா உத்தரவு



ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள்........

REPORT OF 7 th PAY COMMISSION HIGHLIGHTS (DATE : 01/09/2015)


 
 
 
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGRfrLN0eZVV0rK-IrgDmpxiQRuaJhkO9tLIxwl2vX1rDtsc-vtvk60N9KgkeK657JlEHqJKJLJRqv5SB5Y91aWlHc2ESIMZk2GGxGUCCza3cVpe5YeybrfTXep1mqWmY660uMtaTEBhc/s1600/7th+pay+commission.jpg