1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை....


            புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.


            தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.

            இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

              இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன.

             பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும்.பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

Saturday, March 10, 2018

தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி அட்டவனை


தொடக்க நிலை

I st batch 16.03.18 , 19.03.18

II nd batch 20.03.18 , 21.0.18

III rd batch 22.03.18 ,23.03.18

உயர் தொடக்க நிலை

தமிழ் , ஆங்கிலம்
16.03.18 , 19.03.18

கணக்கு
20.03.18 , 21.03.18

அறிவியல்
22.03.18 , 23.03.18

சமூகஅறிவியல்
26.03.18 , 27.03.18

EMIS- இணையதள பதிவின்படி பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்....


09.03.2018 ன்படி பள்ளிவருகை பதிவேட்டின் மாணவர் எண்ணிக்கை மற்றும் பள்ளி EMIS- இணையதள பதிவின்படி மாணவர் எண்ணிக்கை, MOBILE APP மூலம் புகைப்படம் பதிவேற்றம், ID Approval குறித்து தலைமை ஆசிரியர் ஒப்புதலுடன் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம்!!!

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் ....

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட அலுவலர்கள் குழு மூலம் பார்வையிடுதல் மற்றும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் சுற்றறிக்கை அனுப்புதல் சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


கணித ஆசிரியர்களுக்கான "ICT4MATHS" ANDROID MOBILE APP (1 முதல் 12 வகுப்புகள்)


கணித ஆசிரியர்கள் கணினி மற்றும் SMART PHONE போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளைப்  பயன்படுத்தி கணித பாடங்களை மாணவர்கள் மிக எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பிக்க தேவையான இலவச மென்பொருட்கள்,  ANDROID செயலிகள் மற்றும் இணைய வளங்களைத் தொகுத்து "ICT4MATHS" என்னும் ஒரு எளிய  ANDROID செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
"ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலி அனைத்து நிலைகளிலும் (ஆரம்ப்பப்பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை) பணி புரியும் கணித ஆசிரியர்களுக்கு தொழில்நுட்பத்தின் உதவியோடு கணிதத்தை  மிக எளிதாக கற்பிக்க உதவும் ஒரு வழிகாட்டியாகும்.
அனைத்து கணித ஆசிரியர்களும் ICT4MATHS" என்னும் இந்த  ANDROID செயலியை தரவிறக்கம் செய்து, பயன்படுத்தி பயனடையவும்.
LINK:

Tuesday, March 6, 2018

ICT4 ENGLISH - Android App

" ICT4ENGLISH"  is now available at Google Play Store.


ICT4ENGLISH Android App aims to guide the teachers of English to use Free digital resources like android apps, FOSS tools and online resources in the Classroom for better teaching and learning experience.


Kindly download, install, use and share your experience.