Saturday, July 9, 2016

வட்டாரத் தேர்தல் - சிறப்புக்கூட்டம்.......



தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும், தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும் இன்று (09.07.2016)ல்  ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் திரு கி. கோபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும் மாவட்டப் பார்வையாளராகவும் கலந்துக்கொண்ட மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் மத்தூர் வட்டாரச் செயலாளர் திரு ப. தனசேகரன் அவர்கள் தேர்தல் ஆணையாளராகச் செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
முன்னதாக தேர்தல் ஜனநாயக முறைப்படி தேர்தலில் போட்டியிட விரும்பும் அனைவரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, பின்னர் அவை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஏற்கப்பட்டது.
இத்தேர்தலில் ஒரு பதிவிக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மட்டுமே போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்த்து இருந்ததால் தேர்தல் அணையாளர் அனைத்து விண்ணப்பங்களையும் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு ஏற்புசெய்து, அனைத்து பொருப்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு  செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பின்னர் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து பொருப்பாளர்களுக்கும் பதவி ஏற்பும் உறுதிமொழி ஏற்பையும் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் செய்து வைத்து மாவட்டக்கிளையின் சார்பில் வாழ்த்தூகளை கூறி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் இயக்கத்தின் மாவட்ட, மாநிலச் பொருப்பாளர்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறி, அதுபோல் வட்டாரப் பொருப்பாளர்களும் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்களின் குறைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணவேண்டுமெனவும் இயலாச் சூழலில் மாவட்ட, மாநில பொருப்பாளர்களிடம் தெரிவித்து தீர்வு காண வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார், தொடர்ந்து  வரும் 24.07.2016 அன்று ஒசூரில் மாநிலப் பொருப்பாளர்கள் பங்குபெறும் சிறப்புக்கூட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
கீழ்க்கண்ட பொருப்பாளர்கள் பொருப்பாளர்கள் :
வட்டாரத் தலைவர்                    :      திரு கி. கோபால்
வட்டாரச் செயயலாளர்                 :      திரு சே. லீலாகிருஷ்ணன்
வட்டாரப் பொருளாளர்                 :      திரு த. செல்வம்
மகளிர் அணிச் செயலாளர்             :      திருமதி க. தமிழ்ச்செல்வி
துணைத் தலைவர்                     :      திரு கி. நாகேஷ்
துணைச் செயலாளர்                   :      திருமதி இரா. சாந்தா
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் :
1.   திருமதி ச. சித்ரா
2.   திரு க. சக்திவேல்
தணிக்கைக்குழு உறுப்பினர்கள்        :     
1.   திரு பூ. இராம் குமார்
2.   திரு இரா. இராமாண்டவர்
வட்டாச் செயற்குழு உறுப்பினர்கள்    :
1.   திரு ச. இராஜா
2.   திருமதி அ, அனிதா
3.   திருமதி பொ. கௌரம்மாள்
4.   திருமதி க. சரஸ்வதி
5.   திருமதி ஜே. மேனகா
6.   திரு ஆ. மணிவண்ணன்
7.   திருமதி மு. இலட்சுமி
8.   திருமதி த. லதா
9.   திரு சி. அன்பு
10.  திரு அ. முத்துசாமி
இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு த செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.  



































Thursday, July 7, 2016

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நீட்டிப்பு: முதல்வர். ....

          அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை நான்கு ஆண்டு காலத்திற்கு செயல்படுத்திட தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2012-ம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் அரசுப் பணியாளர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 30.6.2016-ல் முடிவடைந்தது. எனவே, 1.7.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினைசில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்திட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப் புள்ளியை ஏற்கும் குழு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான காலத்திற்கு அரசுப் பணியாளர்களுக்கான புதிய மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டுநிறுவனம் மூலம் செயல்படுத்திட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டத்தை விட இந்த புதிய காப்பீட்டுத் திட்டம் சில கூடுதல் பயன்களுக்கு வகை செய்துள்ளது.

           இந்த புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாய் என தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7.50 லட்ச ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத் திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன் பெற வகை செய்யப்பட்டுள்ளது.

      விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும்.

       இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத் தொகையாக மாதம் 180/- ரூபாய் செலுத்த வேண்டும். அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, July 5, 2016

தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம்......



மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 03.07.2016ல் சூளகிரி துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக சூளகிரி வட்டாரச் செயலாளர் திரு இரா. இராஜேஸ் எபனேசர் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்துக்கொண்டு தலைமை உரையாற்ரிய மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் இயக்கத்தின் மாவட்ட, மாநிலச் செயல்பாடுகள் பற்றியும், வரும் நடைபெற உள்ள வட்டாத் தேர்தல்கள் மற்றும் வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாளர் மற்றும்  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள் கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் இயக்கச் செயல்பாடுகள் பற்றியும், நடைபெற உள்ள வட்டாரத் தேர்தல்கள் அதற்கான நடைமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
அதன் பின்னர் மாவட்டத்துணைப் பொருப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வட்டார பொருப்பாளர்கள் கருத்துரை வழங்கினர்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் : 1.
       வரும் 09.07.2016 அன்று ஊத்தங்கரை, 10.07.2016 அன்று மத்தூர், கெலமங்கலம், தளி, 17.07.2016 அன்று ஒசூர், சூளகிரி ஆகிய வட்டாரங்களில் தேர்தலை முறையாகவும், சிறப்பாகவும் நடத்துதல்
தீர்மானம் : 2.
       வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாளர் மற்றும்  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள் கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பங்கேற்கச் செய்து கூட்டத்தை சிறப்பாக நடத்துதல்.
தீர்மானம் : 3.
       மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஊதியக்குழு அறிவிப்புகளை ஏற்று மாநில அரசும் அரசும் விரைந்து ஊதியக்குழு அமைத்து, ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்ட குறைகளை களைந்து, புதிய  ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.
தீர்மானம் : 4.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை ஒளிவு மறைவின்றி விரைந்து நடத்திட மாநில அரசு னடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் : 5.
       அரசு புதிய நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை கற்பிக்க  தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை பதவி உயர்வு மூலம் நியமிக்க உரிய நடவடிக்கை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் : 6.
       தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட காலவரையரை  முடிவடைந்து விட்டதால் விரைந்து புதிய திட்டம் துவக்கிடவும், அதில் அரசு ஊழியர் தமது பெற்றோர்களையும் இணைத்துக்கொள்ளவும், மாநிலத்தின் எந்த மருத்துவமணையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் உரிய திருத்தம் தமிழக அரசு செய்திட வேண்டும்.
தீர்மானம் : 7.
       உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆசிரியர் பணிப் பதிவேடுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவருக்கு கூட வாரிதாரர் உள்ளிட்ட பதிவுகள் செய்யப்படாமல் உள்ளதை கவனத்தில் கொண்டு அனைத்து பதிவுகளை முறையாக செய்திட மதிப்புமிகு  தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு து. மனுநீதி உள்ளிட்ட அனைத்து வட்டார பொருப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்
 இறுதியில் மாவட்டப் பொருளாளர் திருஅ.செ.நவீத்அக்பர்  அனைவருக்கும் நன்றி கூறினார்.