Monday, September 30, 2013
விலையில்லா பாடநூல்கள் வழங்கல்
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விலையில்லாப் பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.
இன்று (30.09.2013) முதல் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசால் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான விலையில்லாப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது அதன்படி இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ பாடநூல்கள், பாடக் குறிப்பேடுகள் மற்றும் மூன்றாவது சீருடை ஆகியன வழங்கப்பட்டது.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. செ இராஜேந்திரன் அவர்கள் தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா கல்விப் பொருட்கள் பற்றியும், அவற்றை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்றும் கூறி இப் பொருட்களைப் பயன்படுத்தி தமது கல்வியை தொடந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறி அனைவருக்கும் விலையிலா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கினார். உடன் உதை ஆசிரியர்கள் திரு. ப. சரவணன், திருமதி சு. சாரதா. திரு. வே. வஜ்ஜிரவேல், திருமதி அ. நர்மதா ஆகியோர் இருந்தனர்.
Friday, September 27, 2013
நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்கள்....
தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை மேம்படுத்த, பள்ளிகளில் கணித ஆய்வுக் கூடங்கள் பள்ளிகளை தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குநர் உத்தரவு
Thursday, September 26, 2013
Wednesday, September 25, 2013
7வது ஊதியக்குழு - எதிர்பார்க்கப்படும் ஊதிய விகிதங்கள் - முந்தைய ஊதியக் குழு ஒப்பீட்டுடன்
7-வது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதியம் மற்றும் முதல் ஊதியக் குழு முதல் 6 ஆவது ஊதியக் குழு வரை ஓர் ஒப்பீடு
7வது ஊதியக் குழு தொடர்பாக பிரதமர் அனுமதித்த கடித விபரம்
Prime Minister Approves the Constitution of Seventh Central Pay Commission
Press Information Bureau
Government of India
Ministry of Finance
Government of India
Ministry of Finance
25-September-2013
FM: Prime Minister Approves the Constitution of Seventh Central Pay
Commission; Recommendations are Likely to be implemented with effect
from 1st January, 2016
The Finance Minister Shri P.Chidambaram in a statement said here today that the Prime Minister has approved the constitution of the Seventh Central Pay Commission.
The fourth, fifth and sixth Central Pay Commissions’ recommendations were implemented as follows:
4th CPC 1.1.1986
5th CPC 1.1.1996
6th CPC 1.1.2006
The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years. Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016.
The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders.
4th CPC 1.1.1986
5th CPC 1.1.1996
6th CPC 1.1.2006
The average time taken by a Pay Commission to submit its recommendations has been about two years. Accordingly, allowing about two years for the 7th CPC to submit its report, the recommendations are likely to be implemented with effect from 1.1.2016.
The names of the Chairperson and members as well as the terms of reference (ToR) of the 7th Pay Commission will be finalised and announced shortly after consultation with major stakeholders.
source-pib
CONFEDERATION OF CENTRAL GOVERNMENT EMPLOYEES & WORKERS
(Central Head Quarters)
1st Floor, North Avenue Post office Building, New Delhi – 110001
(Central Head Quarters)
1st Floor, North Avenue Post office Building, New Delhi – 110001
Dated – 25.09.2013
PRESS STATEMENT
Central Government has announced the constitution of 7th Central Pay
Commission. Confederation of Central Government Employees & Workers
has been raising this demand before the Government right from 2011
onwards and has conducted series of agitational programmes including
Parliament March and one day nationwide strike on 12th December 2012.
While welcoming the decision of the Government, we are disappointed to
note that our demand for five years wage revision w.e.f. 01.01.2011 and
merger of DA has not been considered favourably by the Government. When
the public sector employees are given five years wage revision and the
erosion in real wages has reached an all time high due to steep price
rise, grant of five year wage revision to Central Government employees
is fully justified. Similarly every time the Government appointed pay
commission merger of DA was also granted. This time Government has not
acceded the demand for merger of DA with pay now. Thus by appointing pay
commission employees will not be getting any financial benefit now. The
demand for inclusion of Gramin Dak Sevaks under the purview of the 7th
CPC and grant of merger of DA to GDS is also pending.
In view of the above, the National Secretariat of the Confederation of
Central Government Employees and workers urge upon the Government to
consider the above demands also favourably failing which the
confederation shall be constrained go for further agitational
programmes.
(M. Krishnan)
Secretary General
வைரஸ் காய்ச்சல் - 10 கட்டளைகள்
வைரஸ் காய்ச்சலை தடுக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ள 10 கட்டளைகள்...........
பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலேரியா
போன்ற வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்கள்
10 கட்டளைகளை அறிவித்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால்
மலேரியா, சிக்குன் குனியா போன்ற வைரஸ் காய்ச்சல் குழந்தைகள், பள்ளி
மாணவர்களை எளிதில் தாக்கும். இதனால், அவர்கள் உடல் நலம் கெடுவதுடன்,
கல்வியும் பாதிக்கும். எனவே, நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மற்றும் தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரும், தொடக்க கல்வித் துறை
இயக்குநரும் உத்தரவிட்டுள்ளனர். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும்,
மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டியன குறித்த பத்து கட்டளைகளையும்
பிறப்பித்துள்ளனர்.
தற்போது மழைக்காலமாக இருப்பதால் பள்ளி
வளாகத்தில் நீர் தேங்காமல் இப்பதற்கான தடுப்பு நடவடிக்கையை பள்ளித் தலைமை
ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் குடிநீர்த் தொட்டி,
கழிவு நீர்த் தொட்டி திறந்த நிலையில் இருத்தல் கூடாது. பயனற்ற திறந்த
வெளிக்கிணறு, பள்ளம் இருந்தால் அதை மூடிவிட வேண்டும். பள்ளிக் கழிவறையை
சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கழிவு நீர்க் கால்வாய்
இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாவதை சுகாதாரத் துறை மூலம் தடுக்க
தலைமையாசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற
பிளாஸ்டிக் பொருட்கள், வாகன டயர் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்தி
கொசுக்கள் உற்பத்தியை தடுக்க வேண்டும்.
பள்ளி மேற்கூரையில் தண்ணீர் தேங்காமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பணிக்காக
கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் தேக்கி வைக்காமல் அவ்வப்போது சுத்தம்
செய்ய வேண்டும். சிறு பள்ளம், சிறு கிணறு இருந்தால், அவற்றை மூட வேண்டும்.
இது தொடர்பாக காலையில் நடக்கும் இறைவணக்கத்தின்போது மாணவர்களுக்கு
எடுத்துச் சொல்ல வேண்டும். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக மாணவர்கள் மூலம்
பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்தக் கட்டளைகளை
அமல்படுத்தி நோய் தாக்குதலில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டும் என
அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
மத்திய அர்சு ஊழியர்களுக்கான 7 வது ஊதியக் குழு
மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்
மத்திய அரசின் 7வது ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்
தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள
அறிக்கையில்,
7 வது மத்திய ஊதியக் குழுவை அமைக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இக்குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு தனது பரிந்துரைகள் அளிக்க சராசரியாக 2 ஆண்டுகள் வழங்கப்படும். ஊதியக் குழு அறிவிக்கும் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்டு,
நடைமுறைக்குக் கொண்டு வரப்படும். ஊதியக் குழுவின் தலைவர், உறுப்பினர்களின்
விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். 6வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகள் 2006ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது
Sunday, September 22, 2013
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் திரவ இயக்க அமைப்பு மையம் மகேந்திரகிரி சார்பாக அக்டோபர் 04.10.2013 முதல் 10.10.2013 வரை உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு ( World Space Week ) உயர்நிலை /மேல் நிலை பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டி நடத்துதல் சார்பாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள கடிதம்.
சர்வதேச கைகள் கழுவும் நாள் - கொண்டாட்டம்
அக்டோபர் 15 ஆம் நாள் சர்வதேசக் கைகள் கழுவும் நாளை கொண்டாடுதல் மற்றும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்கள் சத்துணவு உண்ணுவதற்கு முன்பும் / பின்பும் கையினை சோப்பு அல்லது சோப்புக் கரைசல் மூலம் கையினை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதம்
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்திட வேண்டி பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள கடிதம்.
ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் - இயக்குநரின் அறிவுரைகள்
தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்
கைப்பேசி (cellphone) பயன்பாடு - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
மாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சரால் 15.5.2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014ஆம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
Subscribe to:
Posts (Atom)