Saturday, June 16, 2018

மதிப்புமிகு ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணன் அவர்களின் இடைநிலையாசிரியர் பணிநிரவல் பற்றிய பதிவு

*இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களுக்கு தெரிவித்த உறுதியான தகவல்.*
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

          ஆகஸ்ட் 2017 ல் மாணவர்களின் பதிவும் வருகையும் குறைந்திருந்தாலும் 2018 சூன் மாதத்தில் வகுப்பில் போதிய பதிவும் வருகையும் கூடுதலாக இருந்தால் இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்யத் தேவையில்லை. இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினால் போதுமானதாகும் என்று தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளருக்கு நேற்று 15.06.18 மற்றும் இன்று16.06.18 பேசிய போது உறுதியான தகவலை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று பொது நோக்குடன் தெரிவித்தார். அதுசமயம் ஏற்றுக்கொள்ள முன்வராத முதன்மை கல்வி அலுவலர்கள் இருப்பார்களேயானால் அது தொடர்பாக மாநில அமைப்புக்கு உடன் தொடர்பு கொண்டால் இயக்குநர் அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு சரிசெய்யப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட நிரவலும் பெரியளவில் பாதிப்பின்றி செயல்படுத்தப் பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.
            மாணவர்களின் கல்வி நலனை மையப்படுத்திதான் கல்வித்துறை செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Sunday, June 10, 2018

1,300 பள்ளிகளை இழுத்து மூடும் அரசு 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிக்கல் ....


              திண்டுக்கல்:''பணி நிரவல் மூலம் 1,300 பள்ளிகளை மூடி 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலர் வின்சென்ட் பால்ராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
               நிர்வாக சீர்திருத்தம் என தொடக்க கல்வி, பள்ளிக்கல்வி, ஆங்கில வழி கல்வித்துறைகளை ஒருங்கிணைந்துள்ளனர். ஒரே அலுவலரிடம் அதிகாரத்தை குவிப்பதால் ஊழல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, துறைகள் இணைப்பை கைவிட வேண்டும். காமராஜர் முதல் ஜெயலலிதா வரை இருந்த முதல்வர்கள் ஆண்டுதோறும் புதுப்புது பள்ளிகளை திறந்தனர். முதல்முறையாக இப்போது 1,300 பள்ளிகளை அரசு மூடுகிறது. கல்வி அமைச்சரோ, 'பள்ளிகளை மூட வில்லை. இணைப்பு மையமாக செயல்படும்' என்கிறார்.
15,000 பணியிடம் காலி
                         பணி நிரவலால் பள்ளிகள் மூடப்படும். அங்கு பள்ளிகளை மீண்டும் திறக்க கிராம மக்களிடம் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பேச்சு நடத்தி குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். 'புதிய பாடத்திட்டத்தில் அரசு பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஓடி வருவர்' என்கிறார் கல்வி அமைச்சர். மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி வரும் போது ஆசிரியர் இல்லாத நிலை ஏற்படும். பணிநிரவலால் இடைநிலை ஆசிரியர்கள் 10 ஆயிரம் பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 5,000 பேர் குறைக்கப்பட உள்ளனர். ஒரு வகுப்பிற்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமிக்க வேண்டும். பணிநிரவலை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான Android App

DOWNLOAD "CEO PORTAL - TEACHERS APP" - STEP BY STEP PROCEDURE -தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான Android App

DEE - EMIS இணைய தளத்தில் அனைத்து வகை பள்ளி மாணவர்களைப் பதிவுசெய்தல் தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்!!



Saturday, June 9, 2018

கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ பெருந்திரள் ஆர்ப்பாட்டம்…….




     கிருஷ்ணகிரி மாவட்ட ஜாக்டோ சார்பில் இன்று 09.06.2018ல் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
     ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னதாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளியின் மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் திரு ஹரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
     தமிழ்நாடு தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு வெ. சரவணன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் துரை. சாமராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார். 


















Thursday, June 7, 2018

QR CODE-தகவல்* 1,6,9,11 வகுப்பு புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR CODE களை MOBILE PHONE இல் மட்டுமல்லாது நமது LAPTOP மற்றும் DESKTOP இல் SCAN செய்து,PROJECTOR மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க முடியும்.....

    

*QR code-தகவல்*
1,6,9,11 வகுப்பு
புதிய பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை Mobile Phone இல் மட்டுமல்லாது நமது Laptop மற்றும் Desktop இல் Scan செய்து,Projector மூலம் மாணவர்களுக்குக் காண்பிக்க முடியும்.
Windows10 Version
மற்றும் அதற்கு மேற்பட்ட வசதியுடைய Laptop உடையவர்கள்,
Microsoft Store இல் 
QR code for Windows 10
என்ற App Install செய்து பாடப்புத்தகத்தை நேரடியாக Scan செய்து கொள்ளலாம்.
Link:
https://www.microsoft.com/en-in/p/qr-code-for-windows-10/9nblggh5m02g
https://www.microsoft.com/en-in/p/qr-code-for-windows-10/9nblggh5m02g
Windows 10 Version ஐ
விட குறைந்த வசதியுடைய Laptop உடையவர்கள்,
webqr.com
அல்லது
the-qrcode-generator.com
என்ற இணையதளங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி பாடப் புத்தகங்களில் உள்ள QR code களை நேரடியாக Scan செய்து Project செய்யலாம்.
Desktop இல் Scan செய்ய விரும்புவோர்,
புத்தகத்தை e book ஆக Download செய்து அல்லது QR code களைப் போட்டோ எடுத்து Save செய்து,
Quick mark
-software மூலமாக Scan செய்து Project செய்யலாம்.
Link:
https://www.google.co.in/search?q=quick+mark+for+desktop&oq=quick+mark+for+desk&aqs=chrome.1.69i57j33l3.18744j0j4&client=ms-alps-full_lava6735p_sp31_lte-in&sourceid=chrome-mobile&ie=UTF-8

பொது மாறுதல் 2018-கலந்தாய்வு முன்னேற்பாடுகள்- கல்ந்தாய்வு நடத்துவது குறித்தான தொடக்கக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை-3







மாவட்டக் கல்வி அலுவலருடன் சந்திப்பு……





கல்வித் துறையின் நிர்வாகச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக புதிதாகத் தொடங்கப்பட்ட மத்தூர் கல்வி மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராக திரு இல. நடராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே புதிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் வட்டாரப் பொருப்பாளர்கள் இன்று னேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டதோடு, புதிய பாட நூல்கள், கற்றல்/கற்பித்தல் மற்றும் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினர். பின்னர் அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. .  













Wednesday, June 6, 2018

1-5 வரையிலான வகுப்புகளுக்கான கால அட்டவணை

1-5 வரையிலான வகுப்புகளுக்கான பெடகாஜி முறைக்கான கால அட்டவணை (timetable for 1-5)

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல்

2018-2019 கல்வியாண்டிற்கு வட்டார கல்வி அலுவலர் பணிமாறுதலுக்கு தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமைப்பட்டியல் (1 முதல் 410 முடிய)

Saturday, June 2, 2018

புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள் - நன்றி திரு. ஜெகநாதன்TNText book QR code co ordinator


      உங்கள் ஆண்ட்ராய்ட் play store ல் cam scanner எனும் app ஐ install செய்துக்கொள்ளவும். அதில் open செய்து camera ஐ உபயோகித்து Docs என்பதிலிருந்து QR code என்பதற்கு மாறி பாடநூலில் உள்ள QR code களை scan செய்யவும். பிறகு கிடைக்கும் URL ஐ open செய்யவும்.


       பொருளடக்க பக்கம் ( content page ) ல் உள்ள இணைய வளங்கள் (Digi links ) கான QR மற்றும் இணைய செயல்பாடுகள் (ICT corner ) பக்கங்களில் உள்ள QR அனைத்தும் QR code management இணைய வலைபக்கத்தில் சென்று சேரும். அதில் பாட நூலில் உள்ள பக்கங்களின் எண் மற்றும் அதற்கான இணைய உலவு பகுதிகளுக்கான உரலிகளின் இணைப்புகள் ( URL links ) நீல வண்ணத்தில் இருக்கும்.


      சிவப்பு வண்ணத்தில் அந்த உரலிகள் எந்த வகையானவை என்பது குறிக்கப்பட்டிருக்கும். திறன் பேசி எனில் அவற்றை தொடுவதன் மூலமோ, கணினி எனில் அதை சுட்டி மூலம் சொடுக்குவதன் மூலமோ குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்திற்கு தங்களை அழைத்துச்செல்லும்.


      இந்த இணைய பக்கங்கள் அனைத்தும் பாடநூல் குழுவால் பாடநூலில் வைக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளின் தொகுப்பே.


      இவை அன்றி ஆறு இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவையாக (எ.கா X3VU5G ) என்பது போன்று QR code களானது DIKSHA ( Digital Infrastructure for Knowledge sharing ) எனும் இந்திய அளவிலான கல்விசார் வளங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ஓர் வலைபக்கத்தின் (Portal ) QR code களாகும்.


     இவற்றில் நம் ஆசிரியர்கள் தயாரித்து அளிக்கும் கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் மதிப்பீட்டு செயல்பாடுகள் இருக்கும். இவை அனைத்தும் நம் தமிழக ஆசிரியர்கள் தயாரித்து இந்த portal ல் உள்ளிடும் வளங்கள். இவற்றை DIKSHA எனப்படும் ஓர் ஆண்ட்ராய்ட் செயலி மூலம் உபயோகிக்க முடியும். சாதாரண QR code reader app ( e.g cam scanner ) உபயோகிக்கும் போது இவற்றிற்கு online தேவைப்படும்.


      மாறாக DIKSHA app மூலமாக scan செய்யும் போது முதலில் Guest ஆக உள் நுழைந்து நாம் content களை QR code scan செய்து download செய்துக்கொள்ளலாம்.


      ஒரு குறிப்பிட்ட content ஐ download செய்ய பாடபுத்தகத்தின் குறிப்பிட்ட தலைப்பில் வைக்கப்பட்டுள்ள QR code ஐ scan செய்ய வேண்டும். பிறகு download content என்பதை அளித்து ஒரு முறை download செய்துக்கொண்டால் மறு உபயோகத்திற்கு இணைய இணைப்பு இல்லாமல் இந்த content ஐ பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் அந்த குறிப்பிட்ட content ஐ பிற திறன்பேசிகளுக்கும் பகிர்ந்து (share) கொள்ள முடியும். இதற்கு wifi direct வகையிலான share it போன்ற மென்பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


      ஒரு பாடநூலுக்கான அனைத்து content களையும் பதிவிறக்கம் செய்ய பாடநூலின் பொருளக்கப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னூல் QR ஐ scan செய்து download all என்பதை அளிக்கவும். சுமார் 1 GB ( ஒவ்வொரு பாடநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள content களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவு மாறு படலாம் ) அளவிலான content மொத்தமாக download ஆகி விடும். இவற்றை வட்டார அளவிலான வட்டார வள மையத்தில் இருந்து share it மூலம் ஆசிரியர்கள் தங்களுக்குள் பாடநூல் அடிப்படையில் offline லேயே பகிர்ந்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த Ecar file களை பள்ளி அளவிலும் வகுப்பு அளவிலும் பகிர்ந்து அளிக்க முடியும்.


     இதனால் இணையம் இன்றி அனைத்து E content களையும் அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்த முடியும்.


         ஒவ்வொரு QR code ம் ஒரு folder ஆக செயல்படும் இதனால் ஒரு QR code ல் ஒன்றிற்கு மேற்பட்ட மின் ஊடக பதிப்புகளை (econtents ) அளிக்க முடியும். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள QR code களுக்கு தங்களின் சொந்த படைப்புகளை தயாரித்து அனுப்பலாம். இவற்றை தங்கள் Youtube channel ல் பதிவேற்றம் செய்து அந்த வீடியோவிற்கு குறிப்பிட்ட அந்த பாடம் அல்லது பாட உட்தலைப்பனை அளிக்கலாம். அதன் Description ல் அந்த மின் ஊடக வீடியோ எந்த வகையிலானது என்ற குறிப்பினை அளிக்கலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட QR code ஐ scan செய்யும் போது கிடைக்கும் description ஐ அதில் அளித்தலால் போதுமானது. இதற்கென ஒவ்வாரு பாடநூலுக்கும் ஓர் குறிப்பிட்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி என்ற புத்தகத்திற்கு B104 என்ற புத்தக எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.


       அடுத்ததாக அலகு எண் இதற்கு Unit என்ற ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான U என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக B104U1 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 என்பதை குறிக்ககும்.


       அடுத்ததாக பக்க எண் இதற்கு Page என்பதன் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான P என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
உதாரணமாக B104U1P45 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 – பக்க எண் 45 ல் உள்ள QR code உடன் இணைக்க பரிந்துரைக்கப்படும் வீடீயோ என்பது பொருள்.


       அடுத்ததாக கடைசியாக உள்ள CH, HS, AS என்பன முறையே chapter, Hard spot, Assessment என்ற பதங்களை குறிப்பதாகும்.


         நீங்கள் உங்கள் youtube ல் பதிவேற்றம் செய்ய Description ஆக இந்த QR code ஐ scan செய்தால் வரக்கூடிய அந்த B104U1P45CH என்ற குறியீட்டினை உள்ளிட்டு அதற்கான key word ஆக இந்த description code மற்றும் QR code ன் கீழ் வழங்கப்பட்டள்ள 6 இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவை குறியீட்டினையும் அந்த பாடம் மற்றும் பாடப்பகுதி சார்ந்த பிற key word களையும் அளித்து youtube ல் பதிவேற்றம் செய்து அந்த link ஐ அளிக்கப்பட்டுள்ள Google sheet ல் share செய்யலாம். Youtube இல்லாவிட்டாலும் நீங்கள் google drive ல் upload செய்து அந்த link ஐயும் கொடுக்கப்பட்ட Google form ல் பகிரலாம். தங்களின் வீடியோக்கள் பாடநூல் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு QR code ல் இணைக்கப்படும் தங்களின் விவரங்களும் அந்த வீடியோவில் பின் இணைப்பாக வெளியிடப்படும். இவ்வாறாக தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தங்களால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் சென்று சேரும்.


       கற்றல் மின் ஊடக படைப்புகளுக்கான பணிமனைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்க இந்த Google form ஐ நிரப்பவும்.


பாடநூலில் உள்ள QR code வேலை செய்யும் விதத்தினை சோதிக்க ( 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளுக்கான சமச்சீர் ” தமிழ் ” பாடத்திட்டத்தின் ) இந்த pdf ஐ download செய்து print செய்து பயன்படுத்தவும்.

2018-2019 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு - கால அட்டவணை..

Friday, June 1, 2018

DEE - பொது மாறுதல் விண்ணப்பம் 07-06-2018 - க்குள் அலுவலகத்தில் தர வேண்டும்.- பொது மாறுதல் 2018-2019 விண்ணப்பித்தல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!




DSE PROCEEDINGS-ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ஆசிரியர்கள்மாறுதலுக்கு விண்ணப்பித்தல் -சார்பு


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19 : புதிய நெறிமுறைகள் .....


  👍 *ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2018-19-ற்கான நெறிமுறைகள் அடங்கிய பள்ளிக் கல்வித்துறை அரசாணை எண் 403-ல் தொடக்கக் கல்வித்துறை சார்ந்து வகுக்கப்பட்டுள்ள புதிய நெறிமுறைகளை இங்கு காண்போம்!*



👍 *4 நிலைகளில் மாறுதல் நடைபெறும்*

👍 *ஒன்றியத்திற்குள்*

👍 *(புதிய) கல்வி மாவட்டத்திற்குள்*


👍 *மாவட்டத்திற்குள் (கல்வி மாவட்டங்களிடையே)*

👍 *மாவட்டம் விட்டு மாவட்டம்.*

👍 *மாறுதல் வழங்கும் அதிகாரம்*

👍 *ஒன்றியம் & கல்வி மாவட்டத்திற்குள் : மாவட்டக் கல்வி அலுவலர்.*

👍 *மாவட்டத்திற்குள் : முதன்மைக்கல்வி அலுவலர்.*

👍 *மாவட்டம் விட்டு மாவட்டம் : இயக்குநர்.*



👍 *சிறப்பு முன்னுரிமையில் பகுப்பு*

👍 *50% & அதற்கு மேலுள்ள மாற்றுத்திறனாளி (IV)*

👍 *50%-க்கு கீழுள்ள மாற்றுத்திறனாளி (VII)*

👍 *1.6.18-ல் 5 வருடங்களுக்கு மேல் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (V)*

👍 *5 வருடங்களுக்குக் கீழ் ஆசிரியராகவுள்ள இராணுவ வீரர் மனைவி (VIII)*

👍 *1.6.18-ல் ஒரே பள்ளியில் குறைந்தது* *5 ஆண்டுகள் / அதற்கும்மேல்* *பணிபுரிந்தோர் (X)*

👍 *பிற முக்கிய கூறுகள்*

👍 *1.6.2017-க்கு முன் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்றிருக்க வேண்டும்.*

👍 *1.6.2017-ற்குப் பின் தன் இணையை இழந்த ஆசிரியர்களுக்கு சிறப்பு நிகழ்வாக மாறுதல் வழங்கலாம்.*

👍 *மாறுதல் பெறுவோர் இனி குறைந்தது 3 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும்.*

👍 *2017-18-ல் பணிநிரவல் செய்யப்பட்டோருக்கு அனுமதி உண்டு.*



👍 *2018-19 முதல் முன்னுரிமை விபரம் மாறுதல் ஆணையில் இடம் பெறும்.*

👍 *இணையர் உரிமை (SPOUSE) (XI) கோருவோர் தமது இணை பணியாற்றும் மாவட்டத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*

👍 *மலைச் சுழற்சி நடைபெற வேண்டும்.*

👍 *அலகு விட்டு அலகு இல்லை.*

👍 *மாநிலச் சராசரிக்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ள மாவட்டங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மாறுதல் வழங்குவதைத் தவிர்ப்பதோடு, மாறுதல் & பதவி உயர்வில் வெளிமாவட்டங்களில் இருந்து அம்மாவட்டங்களுக்கு நிரப்புதல் வேண்டும்.*

👍 *ஈராசிரியர் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படும் வரை பணிவிடுவிப்பு இல்லை.*

👍 *வழக்கத்திற்கான மாற்றம்*

👍 *நிர்வாக மாறுதலானது கலந்தாய்விற்கு முன்னரோ பின்னரோ எப்பொழுது வேண்டுமானாலும் வழங்கப்படலாம்.*

தொடக்கக்கல்வி - 2018-19 கல்வியாண்டு கல்வி செயல்பாடுகள்



SABL இல்லை.             
 
படிநிலை(Ladder) இல்லை 
    
 அடைவுத்திறன் அட்டவணை இல்லை.   
 
1 முதல் 3 வகுப்புகள் PILOT METHOD.           
            
4 முதல் 5 வகுப்புகள் SALM METHOD.    
       
 ஈராசிரியர் பள்ளிகள் 1 -3 வகுப்புகள் -ஒருவர்      4-5 வகுப்புகள்-ஒருவர்     
    
மூன்றாசிரியர் பள்ளிகள்      1-2 வகுப்புகள் ஒருவர்        3-4 வகுப்புகள் ஒருவர்   5 ம் வகுப்பு ஒருவர்.       
 
3ம் வகுப்பில் மட்டும்  எண்ணிக்கை அதிகமாக இருப்பின் - ஒருவர்                            4-5 வகுப்பில் ஒருவரும் எடுக்கலாம்.   
                  
 1 முதல் 3 வகுப்புகள் வாரந்தோறும் பாடக்குறிப்புகள் எழுத வேண்டும். (Pilot Method)                         
 
9.30 முதல் 11.00 மணி வரை முதல் பாடவேளை                 
 
11.10 முதல் 12.40 மணி வரை இரண்டாம் பாடவேளை          
       
1.15 முதல் 1.50 மணி வரை கல்வி இணைசெயல்பாடுகள்
 
2.00மணி முதல் 3.20 மணி வரை மூன்றாம் பாடவேளை         
        
3.30 மணி முதல் 4.10 வரை யோகா,Phonetics CD பயன்பாடு.      
       
    ஒவ்வொரு பாடத்திற்கும் துணைக்கருவிகள் கட்டாயம்.       
                 
4 முதல் 5 வகுப்புகள் SALM முறைப்படி பாடக்குறிப்புகள் வாரந்தோறும் எழுத வேண்டும்.     
    
CCE சார்ந்த அனைத்து மதிப்பீடுகளும் உண்டு.( FA(a) , FA(b),SA )