Monday, July 9, 2018

1,6,9,11 TEACHERS HAND BOOK DOWNLOAD EM/TM

                               

  http://www.tnscert.org/tnscert/ebooks/

கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில் "கனவு ஆசிரியர்" விருதுகளையும், ஊக்கத் தொகையாகதலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.



கனவு ஆசிரியர் - 2018 | மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில், சிறந்த முறையில் மாணவர்களை
பயிற்றுவித்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 ஆசிரியர்களுக்கு
"கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருதுகளையும், ஊக்கத் தொகையாக
தலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.

பள்ளிக்கல்வி இயக்குநர்களின் பொறுப்பு மாற்றம்......


 தமிழக அரசின் புதிய சட்டப்படி, இயக்குநர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டுள்ளன.மெட்ரிக் பள்ளி இயக்குநர், தனியார் பள்ளி இயக்குநர் என, பெயர் மாற்றப்பட்டு, கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில், அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க பள்ளி இயக்குநர் கவனித்து வந்தார்.அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் நிர்வாகத்தை, பள்ளிக்கல்வி இயக்குநரும், மெட்ரிக் பள்ளிகள் நிர்வாகத்தை, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநரும் கவனித்து வந்தனர்.
  
இந்நிலையில், தமிழக அரசு இயற்றியுள்ள, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம், 2018ன் படி, இயக்குநர்களுக்கான பொறுப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு என, தனி இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.மெட்ரிக் இயக்குநர் பதவி நீக்கப்பட்டு, அந்தப் பதவிக்கான பொறுப்புகள், தனியார் பள்ளிகள் இயக்குநர் வசம் மாற்றப்பட்டுள்ளன.
மாற்றம் என்ன?.
  
தமிழக அரசின் புதிய சட்டப்படி, ஐந்தாம் வகுப்பு வரையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் எட்டாம் வகுப்பு வரையுள்ள நடுநிலைபள்ளிகளின் நிர்வாகத்தை, தொடக்க கல்வி இயக்குநர் கவனிப்பார்.
10ம் வகுப்பு வரை செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிகள், பிளஸ் 2 வரை செயல்படும், மேல்நிலை பள்ளிகள் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை, பள்ளிக்கல்வி இயக்குநர் கவனிப்பார்.
மெட்ரிக் பள்ளிகளுக்கு என, தனி இயக்குநர் கிடையாது. மாறாக, தனியார் பள்ளிகள் இயக்குநர் என்ற, புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது இவரே, தனியார் மெட்ரிக் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள்,சி.பி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள்,ஐ.பி., என்ற சர்வதேச பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற, பிறவகை பாடத்திட்ட பள்ளிகளின் நிர்வாகத்தை கவனிப்பார்தனியார், 'பிளே ஸ்கூல்' என்ற மழலையர் பள்ளி, பிரைமரி பள்ளிகள், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றவற்றின் நிர்வாகங்களையும், தனியார் பள்ளிகள் இயக்குநரே கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

ENGLISH READING PRACTICE FOR PRIMARY STUDENTS

கூட்டுறவு சங்கத் தேர்தல்: 23ஆம் தேதி தீர்ப்பு.....



கூட்டுறவு சங்கத் தேர்தல் தொடர்பாக திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதாகவும், வேட்பு மனு ஏற்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும், உரிய விளக்கமின்றி மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி திமுக கொறடா சக்கரபாணி, கூட்டுறவுச் சங்கங்களில் போட்டியிட்டவர்கள் என 400க்கும் அதிகமானோர் சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உயர்நீதி மன்றக் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூட்டுறவுச் சங்கத் தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்கவும், 3, 4 மற்றும் 5ஆவது கட்ட தேர்தல்களை நடத்தத் தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்துக் கூட்டுறவுச் சங்கத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கத் தேர்தலை நடத்தலாம் எனவும், முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டதுடன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விரைந்து விசாரிக்க உத்தரவிட்டது.

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா அமர்வில் மதுரை உயர் நீதிமன்றதில் உள்ள அனைத்து வழக்குகளையும் ஒன்றாகச் சேர்த்து சுமார் 400க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அனைத்துத் தரப்புகளும் எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி எழுத்துபூர்வமான வாதங்கள் கூட்டுறவு சங்க ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டன. அதனையடுத்து இந்த வழக்குகளுக்கான தீர்ப்பு வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

மாணவர்களின் நலன் காக்கும் ராகிங் தடுப்பு 'ஆப்':-மனிதவள மேம்பாட்டுத்துறை அறிமுகம்!



மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் துவக்கப்பட்ட, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' குறித்து கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.2017ம் ஆண்டு மே மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உதவியுடன், யு.ஜி.சி., சார்பில், ராகிங் தடுப்புக்கான பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.


மாணவர்கள் ராகிங் புகார்களை நேரடியாக இச்செயலில் பதிவு செய்வதற்கும், புகாருக்கான நகல் எடுக்கவும், புகார் சார்ந்த நடவடிக்கை செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த செயலிகளை, அதிகம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இதுபோன்ற செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லை.2018---2019ம் கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், கல்லுாரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல், குழு உறுப்பினர்கள் விபரங்களை தகவல் பலகையில் ஒட்டுதல், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பேராசிரியர் அழகர்சாமி கூறுகையில், ஒரு சில கல்லுாரிகளில், ராகிங் புகார்கள் காவல்நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல், மறைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு கிடைக்காமல், பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இனி, இச்செயலி மூலம் மாணவர்கள் புகாரை பதிவு செய்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து, பயன்பாடு குறித்து, அறிந்து வைத்திருப்பது அவசியம்,'' என்றார்.

SCERT- தொடக்க/நடு/உயர்/மேல்நிலை ஆசிரியர்களுக்கு காணொலி மூலம் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்