மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் துவக்கப்பட்ட, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' குறித்து கல்லுாரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.2017ம் ஆண்டு மே மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உதவியுடன், யு.ஜி.சி., சார்பில், ராகிங் தடுப்புக்கான பிரத்யேக செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
மாணவர்கள் ராகிங் புகார்களை நேரடியாக இச்செயலில் பதிவு செய்வதற்கும், புகாருக்கான நகல் எடுக்கவும், புகார் சார்ந்த நடவடிக்கை செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும், வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த செயலிகளை, அதிகம் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இதுபோன்ற செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு இல்லை.2018---2019ம் கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், கல்லுாரிகளில் ராகிங் தடுப்பு குழு அமைத்தல், குழு உறுப்பினர்கள் விபரங்களை தகவல் பலகையில் ஒட்டுதல், கண்காணிப்பு கேமராக்களை பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஆன்டி ராகிங் மொபைல் ஆப்' பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பேராசிரியர் அழகர்சாமி கூறுகையில், ஒரு சில கல்லுாரிகளில், ராகிங் புகார்கள் காவல்நிலையங்களுக்கு கொண்டு செல்லாமல், மறைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு கிடைக்காமல், பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். இனி, இச்செயலி மூலம் மாணவர்கள் புகாரை பதிவு செய்தால், உடனடியாக தீர்வு கிடைக்கும். மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து, பயன்பாடு குறித்து, அறிந்து வைத்திருப்பது அவசியம்,'' என்றார்.
No comments:
Post a Comment