Wednesday, July 13, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-1 மதிப்புமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் - தமிழக ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்திப்பு.....

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-1 மதிப்புமிகு த.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவர்களுடன் நமது இயக்கப் பொறுப்பாளர்கள் சந்திப்பு,  இனிய அணுகுமுறையினை பெற்றுத்தந்த சந்திப்பாக அமைந்தது... மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்...*


 *இன்று(13.07.3022) மதியம்  12.00  மணியளவில் முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அழைப்பின் பேரில் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர்,  மாநிலத் தலைவர் திரு.மா.நம்பிராஜ், பொதுச்செயலாளர் திரு அ.வின்சென்ட் பால்ராஜ், மாநிலப் பொருளாளர் திரு க.சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். சந்திப்பின் தொடக்கத்தில் அண்ணன் ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் அவர்கள், முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்  பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த காலத்தில் தங்களைச் சந்திக்கும் போதெல்லாம் மனம் திறந்து பேசுகின்ற பழக்கமுடையவர்கள் நாங்கள்..  அதுபோல் தங்களை பள்ளிக்கல்வித் துறையிலிருந்து பணியிட மாற்றம் செய்த போது எங்களுடைய கடுமையான எதிர்ப்பினை அரசுக்கு தெரிவித்து, வெளிப்படையாக செய்திகளை வெளியிட்டதை தாங்கள் பார்த்திருப்பீர்கள்!.. பள்ளிக் கல்வித்துறையில் உ.பி மாடல் கல்வி கொள்கை நிர்வாகக்  கட்டமைப்பினை, உத்தரபிரதேச மாநிலத்தை சார்ந்த ஒருவர், எங்களுடைய எதிர்ப்பினை அலட்சியம் செய்துவிட்டு அமல்படுத்தி  சென்றுவிட்டார். திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடன்  முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளராக தாங்கள் கல்வித்துறையில் பொறுப்பேற்று   இருக்கின்ற போது ஓராண்டு காலம் ஆகியும் அதை ரத்து செய்யவில்லை என்ற வருத்தம் தான் எங்களிடம் இருந்தது.  வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை. மேலும் எங்களைப் பொறுத்த வரையில் ஆசிரியர்களின் நலனை மையப்படுத்தி  இயக்கம் நடத்தி வருகிறவர்கள்.  தலைவர் கலைஞர் அவர்கள் காலத்தில்  பெற்றுத்தந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வாக்கு வங்கிக்கு அலுவலர்களால் பாதிப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதில் தான் நாங்கள்  உணர்ந்து வேதனையுறுகிறோம். என்று மனம் திறந்து வெளிப்படுத்தினோம்.  முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர் அவர்களும் மனம் திறந்து வெளிப்படைத்தன்மையுடன் நம்மிடம் கலந்துரையாடினார்கள். மிக விரைவில் பள்ளிக்கல்வித்துறையில் நமது பழைய நிர்வாக கட்டமைப்பு அமையும் என்பதை பக்குவ உணர்வுடன் நம்மிடம் தெரிவித்தார்கள்.*


 *🔹18 லட்சம் பேர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அகவிலைப்படியை ஜூலை மாதத்திற்குள் நாம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய போது, அதுவும் மிக விரைவில் அறிவிக்கப்படும் என்பதற்கான அசைவுகளை தெரிவித்தார்கள்..*


 *🔹10.03.2020 அதற்கு முன்னர் உயர்கல்வித் தகுதி முடித்தவர்கள் ஊக்க ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையுடன் வழங்குவதற்கான அரசாணையை நிதித்துறை  வெளியிட்டு விட்டது. ஆனால் இன்னும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படவில்லை என்று தெரியப்படுத்தினோம். விண்ணப்பத்தில் உள்ளவாறு கலந்து பேசுவதாக தெரிவித்தார்கள்.*


 *🔹ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு ஆசிரியர் நியமனம் செய்யலாம். அரசாணை 149 ஐ  இரத்து செய்துவிட்டு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யலாம், என்ற கருத்தினையும் நாம் வலியுறுத்தினோம். நீங்கள் தெளிவாக தொகுத்து கொண்டு வாருங்கள் அதிலும் பிரச்சனைகள் இருக்கிறது, கலந்து பேசுவோம்..  என்று பதில் கூறினார்கள்.*


*🔹அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சட்ட பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதை அண்ணன் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். முதன்மைச் செயலாளர் அவர்களும் உணர்ந்து அது குறித்து கருத்து தெரிவித்தார்கள்.*


*🔹100 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளில் ஒர் ஆசிரியர் தான் பாடம் நடத்தி வரும் வேதனையான நிலைமை   இன்னமும் தொடர்கின்றது.  ஆய்வுக் குழுவினர் இதுபோன்ற பள்ளிகளுக்கும் சென்று பார்வையிட்டால் தான் உண்மை நிலை அறிய முடியும்.  மேலும் பள்ளிகளில்  நடைபெறும் புள்ளிவிபர பணியினால்   மாணவர்களுக்கு  பாடம் நடத்த இயலவில்லை என்பதனை மாநில பொறுப்பாளர்கள் எடுத்துரைத்தார்கள்..*


*🔹EMIS இல் ஏற்படுகின்ற தொல்லைகளை நேரலையாக விவரித்து கூறினோம். முதன்மைச் செயலாளர் அவர்கள், EMISஇல் சிரமங்கள்  இருந்தாலும் ஆசிரியர்களுடைய மாறுதல் கலந்தாய்வில் எவ்வித ஊழலுக்கும் இடமளிக்காமல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது என்பதை கேள்விப்படுகிற போது எங்களுக்கு பெருமையாக உள்ளது  என நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள். நாமும் அனைத்து வகை ஆசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல்களும், ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் சிறப்பாக நடந்து வருகிறது என்பதை பெருமித உணர்வுடன்  பகிர்ந்து கொண்டோம். நான் அலுவலர்களிடம் பேசுகிற போதெல்லாம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால்  ஆசிரியர்களைத்தான் நாம் ஊக்கப்படுத்த வேண்டும்; அவர்கள் மனநிலை பாதிக்க கூடிய வகையில் அலுவலர்கள் நடந்து கொள்ளக் கூடாது;  ஆசிரியர்களை நம்பி தான் அரசு பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தவறு செய்கிற ஆசிரியரிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டுமே தவிர தண்டனை அளிக்கக் கூடிய வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்ற இதய பற்றுதலை நம்மிடம் தெரிவித்துக் கொண்டார்கள். சங்கங்கள் அரசுப் பள்ளிகளை  சவாலாக எடுத்துக்கொண்டு மாணவர்கள் கல்வித்தரம் உயர பாடுபட வேண்டும் என்று உரிமையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்கள்..*


 *🔹பள்ளிக்கல்வித் துறை ஆணையர் ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும்படி செயல்பட்டு வருவதை நாம்  தெரிவித்த போது, அவரை அழைத்து பேசுவதாக நம்மிடம் தெரிவித்தார்கள்.*


 *🔹பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்துதல், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு களைதல், முன் அனுமதி பெறாமல் உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பின்னேற்பு ஆணை வழங்குதல்,  சரண்  விடுப்பு பணப்பலன் வழங்குதல், பி.லிட்.பி.எட்., நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் உள்பட தீர்வு காண வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் அடங்கிய  விண்ணப்பத்தினை அளித்து தீர்வுகாண கேட்டுக்கொண்டோம்..*


*அக்கறை உணர்வுடன் நமது கோரிக்கை விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்கள். முதன்மைச் செயலாளர் அவர்கள் முதிர்ந்த பக்குவத்தினை பெற்றிருப்பதை  அவரது செயல்பாடுகள் மூலம் நம்மால் உணர முடிந்தது...*


 *சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு பயனுள்ள இனிய சந்திப்பாக நடைபெற்றது. இந்த இனிய அணுகு முறையுடன் கூடிய  சந்திப்பு என்றும் தொடரும்.. என்ற நம்பிக்கை உள்ளது...*


 *நன்றி பாராட்டுதல்களுடன்..*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*

*மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.*

*அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்.*


*க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்.*

*தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை,52,  தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.*

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்.....

           மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் - EMIS ல் Approve செய்யும் போது ஏற்படும் சிக்கல்களும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய படிநிலைகளும் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் கடிதம்......





Sunday, July 10, 2022

நாளைய (11.07.2022) இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு -- தகவல்....

      இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் எனவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

Saturday, July 9, 2022

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வழக்கு - ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு......

       தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது ஜூலை 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இன்றைய விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது.

          ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - அறிவிப்பு

 இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெறும் எனவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.


இன்று (09.07.2022) வரையில் 753 எண் வரைக்கும்தான் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது

மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர், கல்வித்துறை ஆணையர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள்!

   திருவாரூரில் நடைபெற்ற மண்டல மீளாய்வுக் கூட்டத்தில் முதன்மைச் செயலாளர் கல்வித்துறை ஆணையர் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரால் வழங்கப்பட்ட அறிவுரைகள்.


எண்ணும் எழுத்தும் வகுப்பறை அனைத்து களங்களையும் (story Corner. Song corner etc.... ) உள்ளடக்கி இருப்பதை உறுதிப்படுத்திட வேண்டும்.

 Learning corners பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு ஆசிரியர் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி வாரந்தோறும்  துணைக்கருவிகள் உடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
 
 கதைக்களம் ஆனாலும் சரி பாட்டு களமாக இருந்தாலும் சரி அல்லது படிப்பு களமாக இருந்தாலும் அதன் அருகே செல்லும்போது அந்த மாணவனுக்கு கதை சொல்லவோ பாடல் பாடவோ அல்லது அதை பார்க்கும்போது வாசிக்கவோ தோன்றக் கூடிய அளவில் கவர்ச்சிகரமாக வகுப்பறைச் சூழல் அமைய வேண்டும்.

எண்ணும் எழுத்தும் வகுப்பறையை எப்படி வைப்பது என்பதனை யூடியூப் வாயிலாகவும் இணையத்தின் வாயிலாக அதற்காக அமைக்கப்பட்டுள்ள டெலிகிராம் குரூப் வாட்ஸ் அப் குரூப் ஆகியவற்றின் மூலமாக ஆசிரியர்கள் அறிந்துகொண்டு நேர்த்தியாக அமைத்திட வேண்டும்.

அனைத்து பாடத்திற்கும் கற்றல் விளைவுகள் வெளிப்படக்கூடிய விதத்தில்  பாட போதனை அமைந்திருப்பதை ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் உறுதி செய்ய வேண்டும்.

முதலில் ஆசிரியர் தான் நடத்துகிற பாடத்தின்  கற்றல் விளைவுகளை நன்கு அறிந்தும் பாட குறிப்பேட்டில் எழுதியும் இருந்திட வேண்டும்.

கற்பிக்கப்படும் எல்லா படங்களின் திறன்களையும் உட்திறன்களையும் ஆசிரியர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். 

எல்லா செயல்பாடுகளிலும் வகுப்பில் உள்ளமெல்ல கற்கும் மாணவர்கள் உட்பட  அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.

பாடம் நடத்தப்படும் போது சிறப்பாக செய்யும் மாணவர்களை பாராட்ட வேண்டும்.

ஆய்வாளர்கள் பள்ளியை பார்வையிடும்போதும் மற்றும் எல்லா பாடவேளைகளிலும்  எண்ணும் எழுத்தும் முறையில் கற்பிக்கப்படும் வகுப்புகளில் தொடர்ந்து அரை மணி நேரம் பாடம் நடத்துவதற்கு ஏற்ற வகையில் முன் தயாரிப்புடன் இருந்திட வேண்டும்.

எண்ணும் எழுத்தும் முறையிலான பாட போதனை  சரியாக இல்லாத பள்ளிகளில்  பாடஆசிரியரும் தலைமை ஆசிரியரும் பொறுப்பாவார்கள்.

 ஆசிரியர்களுடைய வருகையும் மாணவர்களுடைய வருகையும் தினசரி இணையத்தில் பதிவு செய்வதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் இணையத்தில் பதிவு செய்யப்படாத ஆசிரியர் மாணவர் வருகை நாட்கள் பணிக்கு வராத நாட்களாக கருதப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. 

தொடர்ந்து விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 
பணியில் ஆர்வம் இல்லாமலும் மாணவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தாத  ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டிட வேண்டும்.
 எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறைக்கான ஆசிரியர் கையேட்டில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் மாணவர்களுக்கு செய்து காட்டப்பட வேண்டும்.

மாணவர்கள் செயல்பாடுகளை அவர்களாகவே  செய்வதற்கு பயிற்றுவிக்க வேண்டும் தலைமை ஆசிரியர்கள் அனைத்து வகுப்புகளையும்  கண்காணித்து கண்காணிப்பு பதிவேட்டில் பதிவு செய்திட வேண்டும்.

CRC பயிற்சி உள்பட அனைத்து பயிற்சிகளிலும் அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக பங்கேற்று வேண்டும்.

பயிற்சியில் கூறப்படுகிற முறைகளை வகுப்பறையில் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.பயிற்சியில் எடுக்கின்ற  குறிப்புகள் அடங்கிய குறிப்பேடு அனைத்து ஆசிரியர்களின் மேசையிலும் பாட குறிப்புடன  இருந்திட வேண்டும்.

தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்காத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் கற்றல் அடைவு நிலையை உயர்த்துவதற்கு பாடுபட வேண்டும்.

மேற்கண்ட விவரங்களை பள்ளியின் சுற்றறிக்கை பதிவேட்டில் பதிவு செய்து அனைத்து ஆசிரியர்களின்  பார்வைக்கு  வைப்பதற்கும் தக்க நடவடிக்கை எடுப்பதற்கும் தலைமையாசிரியர்கள் ஆவன செய்திட வேண்டும்.

Inspire Awards 2022 - மாணவர்களை பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்துதல்........

       2022-2023 ஆம் ஆண்டிற்கான புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருதுகளுக்கான புதிய பதிவுகள் 2022 ஜூலை 1 - ந்தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.


        அதற்காக பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ததைப் போல www.inspireawards-dst.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் . 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

        உயர்நிலை , மேல்நிலைப்பள்ளிகள் ஒரு பேர்களையும் , நடுநிலைப்பள்ளிகள் ஒரு வகுப்புக்கு ஒருவர் என மூன்று பேரையும் பதிவு வகுப்புக்கு ஒருவர் என ஐந்து செய்யலாம். கூடுதலாகப் பதிவு செய்தால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

              கடவுச்சொல்லை மறந்துவிட்ட பள்ளிகள் Forget Password என்ற பட்டனை அழுத்தி அதன் மூலம் தங்கள் கடவுச்சொல்லைப் புதுப்பித்துக்கொள்ளலா

User ID மறந்துவிட்டால் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவ்ர்களிடம் விண்ணப்பித்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

             தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலமாக இதை மாற்ற இயலாது. தென்காசி , கள்ளக்குறிச்சி , மாவட்டத்தைச் சேர்ந்த ஏற்கனவே பதிவு செய்த பள்ளிகள் 22-23இல் பதிவுசெய்யும் போது செங்கல்பட்டு , திருப்பத்தூர் , இராணிப்பேட்டை . தங்கள் மாவட்டத்தை மாற்றிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கு எண்களைப் பதிவு செய்யும்போது வங்கிக் கணக்கு மாணவரின் பெயரில் தனியான கணக்காக இருக்க வேண்டும். செயல்பட்டிருக்க வேண்டும். வங்கிக்கணக்கு வங்கியின் பெயர் , IFSC Code No. தொடர்ந்து கணக்கு எண் . முதலியவற்றைப் பிழையின்றிக் குறிப்பிட வேண்டும்.

இவற்றைப் பதிவு செய்யும்போது மின்னஞ்சல் , தொலைபேசி எண் மிகுந்த கவனம் தேவை. பதிவு செய்ததிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் ஒவ்வொரு வருக்கும் ரூ 10,000 / - அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். முதலியவற்றைக் குறிப்பிடும் போது பள்ளியின் மின்னஞ்சல் , பள்ளித் தலைமை ஆசிரியரின் அலைபேசி அல்லது பள்ளியின் தொலைபேசி முதலியவற்றைக் குறிப்பது நல்லது.

      புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் பற்றிய தகவல் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் என்பதால் அதில் கவனம் தேவை. பள்ளித் தலைமை ஆசிரியர் ஓய்வு பெறும்போது அலைபேசி எண்கள் மாற்றத்தை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது மிக அவசியம் .

           1 - ந் தேதியிலிருந்து பதிவுகளை வேண்டுகிறோம். மாணவர்களின் பெயர்களைப் பதிவு செய்வதற்கான இணையதளம் 2022 , ஜூலை 2022 செப்டம்பர் 30 - ந்தேதி வரை மட்டுமே இயங்கும். எனவே உடனே செயல்படுத்துமாறு பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த இந்த ஆண்டு அனைத்துப் பள்ளிகளும் தவறாமல் பதிவு செய்ய ஆவன செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, July 6, 2022

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா: சிறப்பாக விமர்சனம் செய்தால் அயல் நாட்டு சுற்றுலா - தமிழக அரசின் அறிவிப்பு

 

அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என்றும், இதில் சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அயல் நாட்டுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம்:


மிஸ்டர் பீன் தெரியாத குழந்தைகள்


உலகெங்கும் உள்ள குழந்தைகளுக்குத் தெரிந்த ஒரு பெயர் எதுவாக இருக்கக் கூடும்? சார்லி சாப்ளின்? அண்மையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளிக்கூடத்தில் பயிலும் சிறுவனிடம் கேட்டபோது, சார்லி சாப்ளினை அவனுக்குத் தெரியவில்லை. இன்றைய குழந்தைகளுக்குப் பிடித்தமான மிஸ்டர் பீன்? அவரையும் தெரியவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் உள்ள சிறார்களிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தாலே அவர்கள் சர்வசாதாரணமாக இந்தப் பெயர்களை உச்சரிப்பதைப் பார்க்கலாம்.


சிறார் திரைப்பட விழா


நகர்ப்புறக் குழந்தைகள் ஓடிடி தளங்களைப் பற்றிச் சொல்கிறார்கள். அதில் பார்த்த திரைப்படங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். மாறாக இணைய வசதி இல்லாத தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமொன்றில் வாழும் சிறார்களுக்கு ஓடிடி குறித்தெல்லாம் தெரிவதில்லை. குழந்தைகள் பார்ப்பதற்கென்று தரமான திரைப்படங்கள் உலகெங்கும் வந்துகொண்டிருக்கின்றன. நம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அவையெல்லாம் எட்டவேண்டாமா? தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இப்படி யோசித்ததன் விளைவுதான் இன்று சிறார் திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ளது.


மாதம் தோறும்


மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை ’சிறார் திரைப்பட விழா’ என்கிற பெயரில் பள்ளிக் கல்வி துறை வகுத்துள்ளது. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். திரைப்படங்கள் மாணவர்களுடைய சிந்தனையிலும் செயல்பாடுகளிலும் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின் வாயிலாக இவ்வுலகத்தை புதிய பார்வையில் மாணவர்களைக் காண வைப்பதும் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதுமே இம்முயற்சியின் முக்கிய நோக்கம்.


தனி பாடவேளை


இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இந்த ஆசிரியர் மூலமாக 6 முதல் 9 வரை பயிற்றுவிக்கும் பிற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு சுழற்சி முறையில் இப்பொறுப்பு வழங்கப்படும்.

திரையிடுதலுக்குத் தேவையான உபகரணங்கள் பள்ளியில் இல்லாவிட்டால், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் வெளியிலிருந்து அவற்றை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.


வினாடி - வினா 


திரையிடுதலுக்கு முன்பாகவே பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சிறார் திரைப்பட விழாவின் நோக்கங்கள் குறித்தும் திரையிடப்படும் படத்தின் முக்கியத்துவம் குறித்தும் அதன் கதை வெளிப்பட்டுவிடாமல் மாணவர்களிடம் ஓர் உரையாடல் நிகழ்த்தி படம் பார்ப்பதற்கான ஆர்வத்தைத் தூண்டுவார்கள். திரைப்படம் முடிந்தபின்னர், அது குறித்த கலந்துரையாடல் நிகழ்வும் வினாடி-வினா நிகழ்வும் நடத்தப்படும். பின்னூட்டக் கேள்வித்தாள் வழங்கப்பட்டு அதன்மூலம் மாணவர்களின் கருத்துகள் அறியப்படும்.


சிறந்த விமர்சனங்களுக்கு பரிசு


5மாணவர்களை இத்திரைப்படம் குறித்து 2-3 நிமிடங்களுக்குப் பேசவைக்கப்படுவார்கள். மாணவர்கள் திரைப்படம் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை எழுதி அளிக்கலாம் அல்லது வரைந்தும் அளிக்கலாம். ஏதேனும் ஒரு காட்சியை அல்லது உரையாடலை நடித்தும் இயக்கியும் காட்டலாம். திரைப்படம் குறித்த சிறந்த விமர்சனம் எழுதும் மாணவர்களின் கருத்துகள் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படும் சிறார் இதழில் பிரசுரிக்கப்படும்.


ஸ்பாட் லைட்


திரையிடப்பட்ட படத்திற்கு இரண்டாம் பாகம் என ஒன்று இருந்தால், அது எப்படி இருக்கக்கூடும் என்பதை குழந்தைகளை அவர்களின் கற்பனைகொண்டு எழுத வைக்கப்படுவார்கள். கதைக்களம், கதைமாந்தர்கள், உரையாடல், கதை நடக்குமிடம், ஒளிப்பதிவில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள், ஒலி மற்றும் ஒட்டுமொத்த திரைப்படம் பற்றிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும் ‘ஸ்பாட்லைட்’ என்கிற நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வில் சிறப்பாக பதிலளிக்கும் தனிநபர் ஒருவருக்கும் அணி ஒன்றிற்கும் பரிசுகள் வழங்கப்படும்.


’இந்தக் கதை எங்கே நிகழ்கிறது?, ‘இந்த இடத்தில் நிகழ்கிறது என எவ்வாறு அறிந்துகொண்டீர்கள்?’, ’ஏதேனும் ஒரு பாத்திரத்திற்கென தனியாக ஒரு வண்ணமோ அல்லது குறிப்பிட்ட ஒலியோ இசையோ பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகள் ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் இடம்பெறும். ஒவ்வொரு மாதமும் திரையிடலுக்கு முன்பாக பொறுப்பு ஆசிரியர் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ஸ்பாட்லைட் நிகழ்வுக்கென தனியாக கேள்விகளை உருவாக்கலாம்.


பள்ளி அளவில் சிறந்த மாணவர்கள் தேர்வு


’சிலவர் ஸ்க்ரீன் ஆப்’ என்கிற ஒரு கைப்பேசிச் செயலி உருவாக்கபட்டு அதன் வாயிலாக அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்படும். திரையிடல் முடிந்த நாளிலேயே அதற்கான பின்னூட்டங்கள் செயலி வழியாக பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய திரைப்படத்திற்கான சுட்டி பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவர்கள் ஒன்றிய அளவிலும் ஒன்றிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பளிக்கப்படும்.


கலைதுறை வல்லுநர்களோடு கலந்துரையாடல்


சிறார் திரைப்படத் திருவிழாவின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி நிகழ்வு மாநில அளவில் ஒரு வாரத்திற்கு நடைபெறும். ஒவ்வொரு மாதமும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட நிகழ்வுகளில் பங்கேற்பர். கலைத்துறை சார்ந்த வல்லுநர்களோடு இம்மாணவர்களை கலந்துரையாடலில் பங்கேற்கச் செய்து தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.


அயல் நாட்டு சுற்றுலா


மாநில அளவில் பங்கேற்கும் மாணவர்களிலிருந்த 15 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலக சினிமா குறித்த மேலும் அறிந்துகொள்ளும் வகையில் அயல்நாடொன்றிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். திரைப்படங்கள் குறித்த விமர்சனப் பார்வையை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும் என்பதே இத்திரையிடலின் நோக்கம்

Sunday, July 3, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம்: நாளை (04.07.2022) முதல் விண்ணப்பிக்கலாம் ......

 

  தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகள் உள்ளடக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதோடு, தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை ஜுலை 4-ஆம் தேதி முதல் வரும் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார்.

 அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 1331 பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களே நியமனம் செய்யலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது. இந்த உத்தரவு ரத்து செய்ய வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது. 

     இந்நிலையில் தற்போது தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வருமாறு,

  • ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை கொடுத்துத் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரியவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம்.
  • பள்ளிக்கு அருகே மாவட்டத்திற்கு வசிக்கும் நபர்களுக்கு முன்னரிமை அளித்து ஆசிரியர்களாக நியமிக்கலாம்.
  • திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

வரைமுறை..... 

  • இடைநிலை ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 1 ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 2 -வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
  • முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020ல் வெளியான அரசாணையின் படி தகுதி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை ஜுலை 4-ஆம் தேதி முதல் ஜுலை 6 ஆம் தேதி மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் எனப் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்திருக்கிறார். அதோடு, தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி அளிக்காவிடில் அவர்கள் உடனே பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்குத் தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Saturday, July 2, 2022

இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல்....

 தொடக்கக் கல்வித்துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.....

DEE - District Transfer - SGT,  BT Seniority List - Download here

எண்ணும் எழுத்தும்" Baseline Survey - ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறம் - DEE Proceedings....

          மாணவர்களுக்கான எண்ணும் எழுத்தும் Baseline Survey ஜூலை 4 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்......






ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2021-22 ஆம் ஆண்டிற்கான வங்கி கணக்குகள் வட்டி வரவு மற்றும் செலவிடப்படாத தொகைகள் அனைத்தும் திரும்ப செலுத்தக் கோருதல் - சார்பு....

 




ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் - TRB அறிவிப்பு....


 

மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு - தொடக்கக் கல்வி இயக்குநரின் கூடுதல் அறிவுரைகள்!....