கல்வித் துறையின் நிர்வாகச் சீர்திருத்தத்தின்
ஒரு பகுதியாக புதிதாகத் தொடங்கப்பட்ட மத்தூர்
கல்வி மாவட்டத்தின் மாவட்டக் கல்வி அலுவலராக திரு
இல. நடராஜன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே புதிய மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களை
தமிழக
ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் ஊத்தங்கரை மற்றும் மத்தூர் வட்டாரப் பொருப்பாளர்கள் இன்று னேரில் சந்தித்து
வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டதோடு, புதிய பாட நூல்கள், கற்றல்/கற்பித்தல் மற்றும்
மாவட்டத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடினர். பின்னர் அடுத்த வாரம் நடைபெற
உள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
.
No comments:
Post a Comment