*இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர்
அவர்கள் அண்ணன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்களுக்கு தெரிவித்த
உறுதியான தகவல்.*
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஆகஸ்ட் 2017 ல் மாணவர்களின் பதிவும் வருகையும் குறைந்திருந்தாலும் 2018
சூன் மாதத்தில் வகுப்பில் போதிய பதிவும் வருகையும் கூடுதலாக இருந்தால்
இடைநிலை ஆசிரியர்களை பணிநிரவல் செய்யத் தேவையில்லை. இது குறித்து வட்டாரக்
கல்வி அலுவலர்கள் வழியாக மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலரிடம்
ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டினால் போதுமானதாகும் என்று தொடக்கக்கல்வி
இயக்குநர் அவர்கள் ஐபெட்டோ அகில இந்திய செயலாளருக்கு நேற்று 15.06.18
மற்றும் இன்று16.06.18 பேசிய போது உறுதியான தகவலை தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கக் கூடாது என்று பொது நோக்குடன்
தெரிவித்தார். அதுசமயம் ஏற்றுக்கொள்ள முன்வராத முதன்மை கல்வி அலுவலர்கள்
இருப்பார்களேயானால் அது தொடர்பாக மாநில அமைப்புக்கு உடன் தொடர்பு கொண்டால்
இயக்குநர் அவர்களிடம் உடனே தொடர்பு கொண்டு சரிசெய்யப்படும் என்பதை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறோம்.நாம் கேட்டுக் கொண்டதற்கிணங்க பட்டதாரி
ஆசிரியர்கள் பணியிட நிரவலும் பெரியளவில் பாதிப்பின்றி செயல்படுத்தப்
பட்டுள்ளது என்பதை நாம் அறிவோம்.
மாணவர்களின் கல்வி நலனை மையப்படுத்திதான் கல்வித்துறை செயல்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment