கிருஷ்ணகிரி
மாவட்ட ஜாக்டோ சார்பில் இன்று 09.06.2018ல் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னதாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திரு
செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு
தொடக்கப்பள்ளியின் மாவட்டச் செயலாளர் திரு செ. வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர்
திரு ம. பவுன்துரை, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் திரு ஹரி ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு
தொடக்க நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு
வெ. சரவணன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். இறுதியில் துரை. சாமராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment