எந்த ஒரு எச்சரிக்கை செய்தியைக் கொடுக்காமலே, எந்த நேரத்திலும்
கம்ப்யூட்டர் தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிடும். இதுதான் கம்ப்யூட்டரில்
உள்ள மிகப்பெரிய குறைபாடு.
அவ்வாறு கணினி தனது இயக்கத்தை நிறுத்திடும் பொழுது அதில் உள்ள உங்களுடைய
மதிப்பு மிக்க படங்கள், கோப்புகள், வீடியோக்கள், கடிதங்கள், அலுவலக
கோப்புகள் என அனைத்தையும் இழக்க வேண்டி வரும்.
இதனால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, அக் கோப்புகளை மீட்டெடுக்க நிறைய செலவு செய்ய வேண்டியதிருக்கும்.
கம்ப்யூட்டர் பாதுகாப்பு:
உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள். கம்ப்யூட்டர் மற்றும்
அதனுடன் இணைந்திருக்கும் சாதனங்களுக்கு சரியான மின் இணைப்பு,
மின்வழங்கிகளைத் தேர்வு செய்து பயன்படுத்துங்கள். நேரடியாக மின்சார இணைப்பை
கொடுக்க வேண்டாம்.
புரோகிராம்களை மேம்படுத்துங்கள்:
கம்ப்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் புரோகிராம் மற்றும் ஹார்ட் டிரைவ்களை
அப்டேட்டிவ்வாக வைத்திருப்பதைப்போன்ற நல்லதொரு விஷயம் வேறெதுவும் இல்லை.
எந்த ஒரு மென்பொருள் தயாரிப்பாளரும், அதை வெளியிட்ட பிறகு அதிலுள்ள errors
கண்டு பிடித்து அதற்கெற்ற அப்டேட்களை கொடுத்து அந்த பிரச்சினைகளை
தீர்ப்பார்கள்.
குறிப்பாக ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை நீங்கள் இன்ஸ்டால்
செய்திருந்தால்.. அதிலிருக்கும் வழுக்களைப் பயன்படுத்தி புதிய வைரஸ்
புரோகிராம்களை இணையவெளியில் உலவ விடுவார்கள்.
அப்புதிய வைரஸ்களை கண்டுபிடிக்கும் அளவிற்கு மென்பொருளில் செய்நிரல்கள்
இல்லாது இருக்கலாம். அந்த புதிய வைரசை கண்டுபிடித்ததும், அந்த வைரஸ்
எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமானது அதற்கான அப்டேட்களை வழங்கும்.
தொடர்ச்சியாக இதுபோல புதிய புதிய வைரஸ்கள் வரும்பொழுது அதைத் தடுத்து
நிறுத்தும் வித்தில் புதிய புதிய அப்டேட்களை கொடுத்துக்கொண்டே இருக்கும்.
அதனால் தொடர்ந்து ஆண்ட்டி வைரசை அப்டேட் செய்ய வேண்டும் என பயனர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்கள் மட்டுமல்ல.. கம்ப்யூட்டர் சிஸ்டத்திலுள்ள
ஒவ்வொரு புரோகிராமிற்கு இது பொருந்தும். மைக்ரோசாப்டின் விண்டோஸ்
இயங்குதளத்திற்கும் இதுபோன்ற அப்டேட்கள் உண்டு.
வைரஸ், ஸ்பைவேர், பிஸ்சிங் மற்றும் ஸ்பேமிலிருந்து பாதுகாப்பு:
இன்றைய சூழலில் ஒவ்வொரு கம்ப்யூட்டரும் கண்டிப்பா இணையத்தில்
இணைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக விண்டோஸ் கம்ப்யூட்டரை நீங்கள்
பயன்படுத்திக்கொண்டிருந்தால் நிச்சசயம் அதில் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான
சாத்தியங்கள் அதிகம்.
எனவே கண்டிப்பாக உங்கள் கம்ப்யூட்டரில் நல்லதொரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருளை
நிறுவ வேண்டும். அவ்வாறு நிறுவும் மென்பொருள்கள் இணையம் வழியாக பரவும்
வைரஸ், மால்வேர், ஸ்பைவேர் போன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களை கண்டறிந்து
அவை உங்கள் கணினியில் பரவாமல் தடுத்து அழிக்கிறது.
எனவே கணினி பயனாளர் இதுபோன்ற வைரஸ் பிரச்சினைகள் வராமல் பாதுகாத்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
புதிய கணினி பயனாளர்களுக்கு:
கம்ப்யூட்டருக்கு புதியவர்கள் செய்யும் சில பொதுவான தவறுகள் என்று இவற்றை
குறிப்பிடலாம். அதாவது கம்ப்யூட்டரில் தோன்றும் டயலாக் பாக்சில் என்ன
தோன்றியுள்ளது. அதில் என்ன குறிப்பிட்டப்பட்டுள்ளது என்பதைப் பார்க்காமலேயே
Yes, அல்லது No கொடுத்துவிடுவது. பெரும்பாலும் அனைவரும் ஓ.கே அல்லது யெஸ்
கொடுத்துவிடுவார்கள்.
அவ்வாறு கொடுக்கும்பொழுது அடுத்து என்ன நிகழ்கிறது என்பதை கவனித்து ஏதாவது
புரோகிராம் இன்ஸ்டால் ஆகிறது எனில் அதை கேன்சல் கொடுத்திட வேண்டும்.
ஏதாவது இலவச மென்பொருளை நிறுவும்பொழுது, அதில் உள்ள செக் பாக்ஸ்களை கவனித்திட வேண்டும்.
உதாரணமாக அடோபி பிளாஸ் பிளேயர் மென்பொருளை நிறுவிடும்பொழுது கூடுதலாக
அதனுடன், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஃபைர்வால் புரோகிராம், டூல்பார்
மற்றும் அதனுடன் தொடர்புடை புரோகிராம்களை இன்ஸ்டால் செய்வதற்கான செக்
பாக்ஸ் இயல்பு நிலையில் தெரிவு செய்யப்பட்டிருக்கும்.
அவ்வாறு உள்ளதில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் தெரிவு செய்துகொண்டு வேண்டாத புரோகிராம்களை அன்செக் செய்திட வேண்டும்.
அவ்வாறு மெயின் புரோகிராமுடன் இணைந்து தரப்படும் துணை புரோகிராம்களால்
கம்ப்யூட்டருக்கு ஏதாவது பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
ஒவ்வொரு இலவச புரோகிராமிலும் இதுபோன்ற தொடர்புடைய புரோகிராம்கள் உங்களை
அறியாமலேயே தானாகவே இன்ஸ்டால் ஆகிவிடும். எனவே எந்த ஒரு புதிய
மென்பொருளையும் நிறுவும்பொழுது அதிக கவனத்துடன் நிறுவ வேண்டும்.
ஆல்டர்நேட்டிவ் புரோகிராம்ஸ்:
ஒவ்வொரு கணினி பயனரும், கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களுக்கு மாற்று
புரோகிராம்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக மைக்ரோசாப்ட்
வேர்ட் பிராச்சருக்கு பதில் ஓப்பன் ஆபிஸ் என்ற புரோகிராமும் உள்ளது.
இரண்டு புரோகிராம்களில் செய்யும் வேலைகள் ஒன்றே.. இவற்றில் மைக்ரோசாப்ட்
புரோகிராம் அதிக விலைக்கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ஆனால் ஓப்பன்
ஆபிஸ் மென்பொருள் முற்றிலும் இலவசம்.. ஓப்பன் ஆபிஸ் மென்பொருளைப் பற்றி
அறிய கீழிருக்கும் பதிவு உதவும்.
1. MS-Office க்கு மாற்றீடு King Office மென்பொருள்
மௌஸ் பயன்பாடு.
நடு பட்டன்:
மௌசில் உள்ள நடு பட்டனை ஸ்கோரல் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இதிலும் சில பயன்மிக்க வசதிகள் உள்ளன. ஸ்கோரல் வீலானது நடு பட்டனாகவும்
செயல்படுகிறது. பிரௌஸ் செய்யும்பொழுது இணையப் பக்கங்களில் உள்ள இணைப்பின்
மீது வைத்து நடு பட்டனை அழுத்த அது புதிய விண்டோ அல்லது புதிய டேப்
ஒன்றில் இணையப் பக்கத்தை திறக்கும்.
இணையப்பக்கத்தை இடது, வலது அல்லது மேலிருந்து, கீழாக நகர்த்துவதற்கு இந்த நடு பட்டன் (Scroll wheel)பயன்படுகிறது.
உதவி குறிப்புகளைப் பயன்படுத்துங்கள்:
ஒவ்வொரு புரோகிராமிற்கு உதவிக் குறிப்பு கோப்புகள் உண்டு. உதாரணமாக
மைக்ரோசாப்ட் வேர்ட் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதில் F1 அழுத்தினால்
அந்த புரோகிராம் பற்றிய உதவிக் குறிப்புகள் கிடைக்கும்.
உதவிக் குறிப்புகளை தேடுவதற்கான வசதியும் அதில் இருக்கும். இயல்புநிலையில்
இல்லா நீங்கள் தேடும் உதவிக் குறிப்புகளை இணையத்தின் மூலம் பெறும்
வழிமுறைகளையும் அது கொடுக்கிறது.
1. வெற்றுப் போல்டர்கள் அழிக்க
ஷார்ட் கட் பயன்படுத்துங்கள்:
நேரத்தை மிச்சப்படுத்தவும், நீங்கள் ஒரு தேர்ந்த கணனி பயனாளர் என்பதையும்,
விரைவாக கணினியை கையாளவும் இந்த குறுக்கு வழி விசைகள் பயன்படுகின்றன.
அவற்றைத் தெரிந்துகொண்டு முறையாக பயன்படுத்தக் கற்றுக்கொண்டால் நீங்கள்
உங்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில் ஒரு "ஹீரோ" ஆகிவிடுவீர்கள்.. Short
cut Key களைத் தெரிந்துகொள்ள கீழுள்ள பதிவுகள் உதவும்.
1. விண்டோஸ் 8 ஷார்ட் கட் விசைகள்
கணினியை சுத்தம்:
கணினியில் உள்ள மென்பொருளைகள் பாதுகாப்பிற்கு அப்டேட்கள் மற்றும் ஆண்ட்டி
வைரஸ் புரோகாம்களைப் பயன்படுத்துவதைப் போல, கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்
சாதனங்களையும் தூசி, குப்பை, போன்வைகள் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அன்றாடம் பயனப்டுத்தும் கீபோர்ட், மௌஸ், ஸ்கிரீன், சிபியோ கேபின் போன்வற்றை
மெல்லிய துணியால் நன்றாக துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நன்றி.
- சுப்புடு