கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம் கல்வித் துறையின் நிர்வாக வசதிக்காக 4 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டதன் காரணமாக தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட அமைப்பு, மாநில தேர்தல் விதித் திருத்தத்தின் அடிப்படையில் கல்வி மாவட்ட அளவில் மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அதன் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார். தலைவர் தமது உரையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கல்வித் துறையின் நிர்வாக வசதிக்காக மத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர், டெங்கனிக்கோட்டை என 4 கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது பற்றியும் ஆசிரியர் நலன் காக்கும் வகையில் மாவட்டக் கல்வி அலுவலர்களை எளிதில் சந்தித்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநில சட்ட விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், டெங்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க் கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்தூர் கல்வி மாவட்டம்
1. மாவட்டத் தலைவர் : சா. இராஜேந்திரன்
2. மாவட்டச் செயலாளர் : செ. இராஜேந்திரன்
3. மாவட்டப் பொருளாளர் : த. செல்வம்
4. மாவட்ட மகளிர் அணி : க. தமிழ்ச்செல்வி
5. மாவட்ட து. தலைவர் : இரா. சாந்தா
6. மாவட்ட து. செயலாளர் : பா.ஜியாவுல்லா
7. மாவட்ட தணிக்கைக் குழு : சி. மாதையன்
நிகழ்வில் மாநிலப் பொருளாளர் திரு க. சந்திரசேகர் அவர்கள் புதியதாக தேர்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் சேலம் மாவட்டத் தலைவர் திரு க. உதயகுமார், ஊத்தங்கரை வட்டாரச் செயலாளர் சே. லீலாகிருஷ்ணன், மத்தூர் வட்டாரச் செயலாளர் இரா. தனசேகரன், ஒசூர் வட்டாரம் சார்பில் வெ.இராஜேந்திரன் சூளகிரி வட்டாரச் செயலாளர் இரா.இராஜேஸ் எபனேசர், கெலமங்கலம் வட்டாரச் செயலாளர் வே. சுமன், தளி வட்டாரச் செயலாளர் என்.லோகேஷ் உள்ளிட்ட அனைத்து பொருப்பாளர்களும் வாழ்த்துரை வழங்கினர்.