Tuesday, June 18, 2024
ஊத்தங்கரையில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு... தமிழக ஆசிரியர் கூட்டணியின் வாழ்த்தும், வரவேற்பும்....
ஊத்தங்கரை ஒன்றியத்தில் 100 அரசு துவக்கப் பள்ளிகளும், 29 அரசு நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிர்வாகம் செய்திட 3 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளது.
இதில் கடந்த மே மாதம் பணிநிறைவு மூலம் இரண்டு வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாயின.
அப்பணியிடங்களுக்கு மாறுதல் மூலம் சேலத்தில் இருந்து திரு மா. சீனிவாசன் அவர்களும், இராணிப்பேட்டையில் இருந்து திருமதி மு. சாந்தி அவர்களும் ஊத்தங்கரை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றனர்.
அவர்களுக்கு ஊத்தங்கரை வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் வரவேற்பும், வாழ்த்தும், முன்னால் மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சென்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இன்னொரு வட்டாரக் கல்வி அலுவலர் திரு ச. லோகேஷ், வட்டாரத் தலைவர் த. செல்வம், செயலாளர் சே. லீலாகிருஷ்ணன், பொருளாளர் பூ. இராம்குமார், துணைத் தலைவர் இரா. இராமாண்டவர், வே. சண்முகம், ஈ. அகிலாண்டேஸ்வரி, முன்னால் வட்டாரத் தலைவர் கி. நாகேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
அப்போது ஊத்தங்கரை வட்டாரத்தில் துவக்கக் கல்வியை மேம்படுத்திட அனைவரும் இணைந்து செயல்பட்டு, மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த உறுதி மேற்கொள்ளப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)