Thursday, December 11, 2025
பாரதியார் பிறந்த நாள் விழா 2025.....
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (11.12.2025) பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
முன்னதாக பள்ளி இறை வணக்கக் கட்டத்தில் பாரதியார் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் சோ. சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தமது தலைமை உரையில் பாரதியாரின் வாழ்க்கை, அவரின் பணிகள் ஆகியவை பற்று விரிவாக பேசினார்.
பின்னர் ஒன்றிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா மற்றும் வானவில் மன்றப் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் மா. யோகலட்சுமி, ரா. ஜீவா, கணினி பயிற்றுநர் ச. மரகதம் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
Wednesday, December 3, 2025
உலக மாற்றுத் திறனாளிகள் நாள் உறுதிமொழி 2025......
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று 03.12.2025 உலக மாற்றுத் திறனாளிகள் நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னாதாக பள்ளி காலை இறை வணக்கக் கூட்டத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் உலக மாற்றுத் திறனாளிகள் நாளான இன்று மாற்றுத் திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவர்களை சமூகத்தோடு ஒன்றி வாழச் செய்வதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.
பின்னர் ஒற்றுமையை வளர்ப்போம் என்ற தலைப்பில் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, ரா. ஜீவா, ச. மரகதம் ஆகியோரும், மாணவர்களும் பங்கேற்றனர்.
Subscribe to:
Comments (Atom)






























