Tuesday, January 13, 2026

ஜோதிநகர் பள்ளியில் பொங்கல் விழா 2026....

இன்று ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி இறைவணக்கக் கூட்டத்தில் புகையில்லா போகி உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் பல வண்ணக் கோலங்கலால் நிறைந்த பள்ளி வளாகத்தில், புதிய பாணைகளில் பொங்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து உலகைக் காக்கும் சூரியக் கடவுளுக்கு பொங்கல் படையல் இட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புப் பொங்கல் உணவாக வழங்கப்பட்டது. நிகழ்வில் வண்ணத்துப் பூச்சிகளாய் பலவண்ண ஆடைகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துக்கொண்டனர்.