Sunday, September 22, 2013

சர்வதேச கைகள் கழுவும் நாள் - கொண்டாட்டம்

              அக்டோபர் 15 ஆம் நாள் சர்வதேசக் கைகள் கழுவும் நாளை கொண்டாடுதல் மற்றும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்கள் சத்துணவு உண்ணுவதற்கு முன்பும் / பின்பும் கையினை சோப்பு அல்லது சோப்புக் கரைசல் மூலம் கையினை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதம்

Click here-Celebrate 15thOctober (Global Hand Washing day) , for launching hand washing with soap into the Mid day Meal Scheme in all schools

மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்திட வேண்டி பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள கடிதம்.

ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் - இயக்குநரின் அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்

DEE - COLLABORATIVE LEARNING THROUGH CONNECTING CLASSROOM ACROSS TAMILNADU REG PROC CLICK HERE...

கைப்பேசி (cellphone) பயன்பாடு - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணையில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சரால் 15.5.2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014ஆம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது

Wednesday, August 7, 2013

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



                    இன்று (07.08.2013) மாலை ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.