Sunday, September 22, 2013
பள்ளி மாணவர்களுக்கு பேச்சு மற்றும் கட்டுரை போட்டி
சர்வதேச கைகள் கழுவும் நாள் - கொண்டாட்டம்
அக்டோபர் 15 ஆம் நாள் சர்வதேசக் கைகள் கழுவும் நாளை கொண்டாடுதல் மற்றும் பள்ளிகளில் சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்கள் சத்துணவு உண்ணுவதற்கு முன்பும் / பின்பும் கையினை சோப்பு அல்லது சோப்புக் கரைசல் மூலம் கையினை சுத்தம் செய்ய மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதம்
மாணவர்களுக்கு ஓவியப் போட்டி
தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்திட வேண்டி பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள கடிதம்.
ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் - இயக்குநரின் அறிவுரைகள்
தொடக்கக் கல்வி - தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இணைத்து ஒருங்கிணைந்து பயிலும் திட்டம் சார்பாக பள்ளிகளை தேர்வு செய்தல் குறித்த இயக்குநரின் அறிவுரைகள்
கைப்பேசி (cellphone) பயன்பாடு - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
மாணவர்களின் கைப்பேசி (cellphone) பயன்படுத்துவதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் பள்ளிகளில் வகுப்பறையில் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுரை வழங்க - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு
50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதலமைச்சரால் 15.5.2013 அன்று, உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர் உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில நிதியில் இருந்து 2013-2014ஆம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது
Wednesday, August 7, 2013
Subscribe to:
Posts (Atom)