Wednesday, November 27, 2013

2014ஆம் ஆண்டுக்கான விடுப்பு பட்டியல்

அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு


             அரசு உத்தரவு மற்றும் அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் என்ற ஆணையை பின்பற்றவில்லையென்றால் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு அறிவிப்பு

278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு

              நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி தெரிவித்தார்.


          பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி அஷோக் தாகூர் கூறியதாவது: மத்திய அரசின், முதன்மை திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் 388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இவை, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் திறக்கப்பட உள்ளன.

    மேலும், தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Tuesday, November 19, 2013

மாவட்டப் பொருப்பாளர்கள் மாவட்ட அலுவலர்களைச் சந்தித்தல்......


                தமிழக ஆசிரியர் கூட்டணியின்  புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டப் பொருப்பாளர்கள் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு டி துரைசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு பொன்.குமார், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு இரா. நடராஜன் ஆகியோரைச் சந்தித்தல்........







Monday, November 11, 2013

கல்வித் தகவல் மேலாண்மை - தொடக்கக் கல்வித் துறை உத்தரவு

        அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு


Sunday, November 10, 2013

தமிழக ஆசிரியர் கூட்டணி - கிருஷ்ணகிரி மாவட்டத் தேர்தல்






இன்று ஒசூரில் நடைபெற்ற  தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தேர்தலில் கீழ்க்கண்டவர்கள் மாவட்டப் பொருப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை வட்டாரக் கிளை தனது இதய பூர்வ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

மாவட்டத் தலைவர்        :                             திரு செ. இராஜேந்திரன், ஊத்தங்கரை
மாவட்டச் செயலாளர்       :                           திரு .மி. ஹபிபுர் ரஹ்மான், ஒசூர்
மாவட்டப் பொருளாளர் :                            திரு .எஸ். நவீத்அக்பர், தளி
 மகளிர் அணிச் செயலாளர்:                     திருமதி மு இந்திராகாந்தி, மத்தூர்
தலைமை நிலையச் செயலாளர்:            திரு . மனுநீதி, கெலமங்கலம்
துணைத் தலைவர்கள்:
1.   திரு .  முகம்மதுஜாகீர், ஒசூர்
2.   திரு எஸ். சையத்ஜலால்அகமத், கெலமங்லம்
3.   திருமதி வி. பட்டாணிச்சி, ஒசூர்
துணைச் செயலாளர்கள்
1.   திரு எசேக் ஞானம்ஆர்கேடி, சூளகிரி
2.  திரு .  வெங்கடேசன், மத்தூர்
3.   திருமதி . ஜோதி ,ஒசூர்
தணிக்கைக் குழு உறுப்பினர்கள்

1.  திருமதி இரா. சாந்தி, ஒசூர்
2.  திரு . இராஜசூரியன், ஊத்தங்கரை
மாவட்டத் தேர்தலை சேலம் மாவட்டச் செயலாளர் திரு ச. சந்திரசேகர், மாவட்டத் தலைவர் திரு உதயகுமார் ஆகியோர் ஆணையாளராக இருந்து நடத்திக் கொடுத்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் திரு கோ முருகேசன் அவர்கள் கலந்துக்கொண்டார். மேலும் மாவட்டத்தின் அனைத்து வட்டாரப் பொருப்பாளர்களும், மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.





















Tuesday, November 5, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள்

             தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

          தேர்வர்கள்  கீழ்கண்ட இணைப்பைச் சுட்டி அதில் தமது தமது தேர்வு எண்ணை கொடுத்து பெற்ற மதிப்பெண்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.

http://111.118.182.204/TET_Paper2_result/TET_Paper2_Result.aspx