Monday, December 16, 2013
நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில் இருந்து, தேர்வு செய்யப்பட உள்ள, 15 ஆயிரம் பேர் நியமனத்துடன் சேர்த்து, இந்த, 3,500 பேரும் தேர்வு செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், ஒட்டுமொத்தமாக, 18,500 ஆசிரியர், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
கடந்த
கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் மற்றும் நிரப்பப்படாத பணியிடங்கள் என,
15 ஆயிரம் பேர், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம்,
விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான பணிகள், ஆசிரியர் தேர்வு
வாரியத்தில் (டி.ஆர்.பி.,), மும்முரமாக நடந்து வருகிறது.இந்நிலையில்,
நடப்பு கல்வி ஆண்டுக்கான காலி பணியிடங்கள் குறித்த பட்டியலை, பள்ளி
கல்வித்துறையும், தொடக்க கல்வித்துறையும், தமிழக அரசுக்கு அனுப்பியது.
பள்ளி கல்வி இயக்குனர், 3,487 பணியிடங்களுக்கும், தொடக்க கல்வி இயக்குனர்,
694 இடங்களுக்கும், அரசின் அனுமதி கோரி, பட்டியலை அனுப்பினர். இதை, அரசு
ஆய்வு செய்து, 3,525 இடங்களை நிரப்ப அனுமதி அளித்து, அரசாணை
பிறப்பித்துள்ளது. கல்வித்துறை செயலர், சபிதா, 10ம் தேதி வெளியிட்ட அரசாணை
விவரம்:நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், 314; ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்,
380 பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்ப, அரசு அனுமதி அளிக்கிறது.
மேலும், முதுகலை ஆசிரியர், 809; பட்டதாரி ஆசிரியர், 979; இடைநிலை ஆசிரியர்,
887; சிறப்பு ஆசிரியர் (ஓவியம், இசை, தையல்), 156 பணியிடங்கள் என, 3,525
பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் நிரப்ப, சம்பந்தப்பட்ட துறைகள்,
நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணியாற்றும், வட்டார வள மைய
மேற்பார்வையாளர்களில், 71 பேர், முதுகலை ஆசிரியராகவும், 115 வட்டார வள மைய
பயிற்றுனர், பட்டதாரி ஆசிரியராகவும், பணிமாற்றம் செய்யப்படுவர் எனவும்,
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரம்
கூறுகையில், "2012 13ம் ஆண்டுக்காக, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடம்,
2,800 முதுகலை ஆசிரியர் பணியிடம் உட்பட, 15 ஆயிரம் பணியிடங்களை, டி.இ.டி.,
மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். இவர்களுடன்
சேர்த்து, 3,500 பணியிடங்களை நிரப்பவும் வாய்ப்பு உள்ளது' என, தெரிவித்தன.
மொத்தத்தில், பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையில், 18,500 பேர்
நிரப்பப்பட உள்ளனர்.
Wednesday, November 27, 2013
அரசு அறிவிப்புகளில் தமிழ் தேதி அவசியம் போட வேண்டும் - அரசு அறிவிப்பு
278 புதிய பல்கலைகள், 388 கல்லூரிகள்: மத்திய அரசு முடிவு
நாட்டில் மேலும், 278 பல்கலைக்கழகங்கள், 388
கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உயரதிகாரி
தெரிவித்தார்.
பெங்களூருவில் நேற்று, அகில இந்திய உயர்கல்வி
துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்
துறை உயரதிகாரி அஷோக் தாகூர் கூறியதாவது: மத்திய அரசின், முதன்மை
திட்டத்தின் மூலம், நாடு முழுவதும், 278 புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும்
388 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இவை, 22 ஆயிரத்து 500 கோடி ரூபாய்
செலவில் திறக்கப்பட உள்ளன.
மேலும், தனியார் கல்லூரிகளை ஊக்குவிக்கும்
வகையில், சிறந்த கல்லூரிகளை தேர்ந்தெடுத்து, பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Tuesday, November 19, 2013
Monday, November 11, 2013
கல்வித் தகவல் மேலாண்மை - தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக் கல்வித் துறை உத்தரவு
Subscribe to:
Posts (Atom)