இன்று
09.02.2014 தமிழக
ஆசிரியர் கூட்டணி, கிருஷ்ணகிரி மாவட்டக் கிளை சார்பில் ”இயக்கப்
பொறுப்பாளர்களுக்கான தலைமைப்
பண்பு பயிற்சிக்
கருத்தரங்கம்” ஒசூரில்
நடைபெற்றது.
மாவட்டத்
தலைவர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் முன்னதாக மாவட்டச் செயலாளர் திரு வ.மி. ஹபிபுர்ரஹ்மான் அவர்கள்
அனைவரையும் வரவேற்றார்.
பின்னர் அனைத்து வட்டாரச் செயலர்களும் தமது வட்டாரப் பிரச்சனைகள் மற்றும் இயக்கச் செயல்பாடுகள் குறித்து கருத்துரைகளை வழங்கினர். அதன் பின்னர் மாவட்டத் துணைப் பொருப்பாளர்கள் தமது கருத்துக்களை வாழ்த்துரையாக வழங்கினர்.
பின்னர்
மாவட்டத் தலைவர் தமது தலைமை உரையில் இயக்க நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் அவற்றில் பொறுப்பாளர்கள் பயிற்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கிப் பேசினார்.
பின்னர்
மாநில மகளிர் அணிச் செயலாளர் திருமதி ச. தேன்மொழி,
மாநிலத் தலைவர் திரு கோ. முருகேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் திரு அ. வின்சென்ட்பால்ராஜ் ஆகியோர் தலைமைப் பண்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி தமது கருத்துரைகளாக வழங்கினர்.
அடுத்த
நிகழ்வாக, அகில
இந்திய துவக்கப்
பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பு
பொதுச் செயலாளர் திரு வா. அண்ணாமலை
அவர்கள் தமக்கே உரிய தனி பாவனையில் அனைத்து ஆசிரியர்களும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய தலைமைப்
பண்புகள் மற்றும் மற்றவர்களோடு இணைந்து செயலாற்றுதல் ஆகிய கருத்துக்களை தற்கால எதார்த்த சூழலோடு ஒப்பிட்டுக் காட்டியும், அன்றாட நடைமுறைச் செயல்பாடுகளோடு இணைத்தும் கூறி பயிற்சி அளித்தார்.
இறுதியில்
மாவட்டப் பொருளாளர் திரு அ.செ. நவீத்அக்பர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.