Thursday, May 29, 2014
Monday, May 26, 2014
துறைத் தேர்வு முடிவுகள் - அரசு அறிவிக்கை
Department Exam Bulletins Download
Bulletin No. | View/Download |
---|---|
Bulletin No. 7 dated 16th March 2014(contains results of Departmental Examinations, December 2013) | Download |
Bulletin No. 6 dated 7th March 2014 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2013) | Download |
Saturday, May 24, 2014
வருவாய் மாவட்ட வாரியான +2 தேர்ச்சி விகிதப் பட்டியல்........
10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்: கடைசி இடத்தில் திருவண்ணாமலை.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டன.இதில், மாநில அளவிலான தேர்ச்சி விகிதம் 90.7% ஆக உயர்ந்துள்ளது
வருவாய் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 97.88 சதவீதத்துடன் முதலிடத்திலும், திருவண்ணாமலை 77.84 சதவீதத்துடன் கடைசி இடத்திலும் உள்ளது.பிளஸ் 2 தேர்விலும் திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை வகித்தது கவனிக்கத்தக்கது.
வருவாய் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதப் பட்டியல் பின்வருமாறு:
மாவட்டம் தேர்ச்சி /விகிதம் (%) பள்ளிகளின் எண்ணிக்கை
ஈரோடு 97.88 334
கன்னியாகுமரி 97.78 391
நாமக்கல் 96.58 298
விருதுநகர் 96.55 325
கோயம்பத்தூர் 95.6 502
கிருஷ்ணகிரி 94.58 356
திருப்பூர் 94.38 312
தூத்துக்குடி 94.22 278
சிவகங்கை 93.44 256
சென்னை 93.42 589
மதுரை 93.13 449
ராமநாதபுரம் 93.11 227
கரூர் 92.71 180
ஊட்டி 92.69 177
தஞ்சாவூர் 92.59 390
திருச்சி 92.45 396
பெரம்பலூர் 92.33 124
திருநெல்வேலி 91.98 448
சேலம் 91.89 473
புதுச்சேரி 91.69 279
தர்மபுரி 91.66 285
புதுக்கோட்டை 90.48 295
திண்டுக்கல் 89.84 317
திருவள்ளூர் 89.19 580
காஞ்சிபுரம் 89.17 565
தேனி 87.66 184
வேலூர் 87.35 566
அரியலூர் 84.18 149
திருவாரூர் 84.13 203
கடலூர் 83.71 385
விழுப்புரம் 82.66 534
நாகப்பட்டினம் 82.28 263
திருவண்ணாமலை 77.84 450
Wednesday, May 14, 2014
அரசு மருத்துவக் கல்லூரி - எம்பிபிஎஸ் விண்ணப்பம் விற்பனை
எம்பிபிஎஸ் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பம் விற்பனை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம்
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில்மொத்தம்
2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் (383) இடங்கள் அகில
இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீதமான 2,172
இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
இருந்து சுமார் 1,000 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. சென்னையில்
உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85
இடங்களும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் வழங்கும் சுமார் 900
இடங்களும் மாநில அரசால் நிரப்பப்படுகிறது.
2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது. எல்லா நாட்களிலும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். எம்பிபிஎஸ், பிடிஎஸ் இரண்டுக்கும் ஒரே விண்ணப்பம். விலை ரூ.500. தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் அருந்ததியினர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தங்களது சாதிச் சான்றிதழின் 2 நகல்களை கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 2-ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில், ‘செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவக் கல்வி இயக்குநரகம், 162, பெரியார் ஈ.வே.ரா.நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் - எம்பிபிஎஸ்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களுக்கும் துவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்ப
விநியோகம் கடந்த மே 2-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. விண்ணப்ப விற்பனை
ஜூன் 10-ஆம் தேதி வரைநடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
வரும்ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொலை தூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அஞ்சல் மூலம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.1550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை (Demand Draft) பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (Registrar, Annamalai University) என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்-608002 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
தனி கலந்தாய்வு: மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.
சேர்க்கைக்கு
விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே
கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள்
பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய
இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்கிறார் பல்கலைக்கழக
நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா.
எத்தனை இடங்கள்? எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களும் உள்ளன.
கட்டணம்: எம்பிபிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.5,54,370; பிடிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.3,50,370.
விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in-இல் தெரிந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Saturday, May 10, 2014
12 ம் வகுப்பு பொதுத் தேர்வு - பகுபாய்வுத் தகவல்கள்
TN-DGE: HSE MARCH - 2014 - RESULT ANALYSIS
HSE MARCH-2014 - PERFORMANCE & ANALYSIS
HSE MARCH-2014 - MANAGEMENT APPEARED PASS PERCENTAGE
HSE MARCH-2014 - LANGUAGE WISE TOPPERS
HSE MARCH-2014 - STATE TOPPERS
HSE MARCH-2014 - REVENUE DISTRICT WISE PERFORMANCE
HSE MARCH-2014 - REVENUE DISTRICT WISE TOPPERS
HSE MARCH-2014 - SUBJECT WISE PERFORMANCE
HSE MARCH-2014 - SUBJECT WISE TOPPERS
HSE MARCH-2014 - STATE TOPPERS(TAMIL AS FIRST LANGUAGE)
HSE MARCH-2014 - VOCATIONAL GROUPWISE TOPPERS
Wednesday, May 7, 2014
Subscribe to:
Posts (Atom)