இந்திய அஞ்சல் துறை
சார்பில் நடைபெறும் கடிதம் எழுதும் போட்டிக்கு, டிசம்பர் 22-ஆம் தேதிக்குள்
விண்ணப்பிக்க வேண்டும் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து
சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
44-ஆவது உலக அஞ்சல் ஒன்றியத்தின் கடிதம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
ரொக்கப் பரிசுகள்
தவிர்த்து, தேசியளவில் சிறந்த கடிதமாக தேர்வு பெறும் முதல் மூன்று
தேர்வாளர்களுக்கு உலக அஞ்சல் ஒன்றியம் தங்கம், வெள்ளி, வெண்கலப்
பதக்கங்களுடன் அஞ்சல் தலைகள் அடங்கிய ஆல்பம், சான்றிதழ்கள் ஆகியவை
வழங்கப்படும்.
சென்னையில் மேற்கு
மாம்பலம், ஜூப்ளி சாலையில் உள்ள அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 4-ஆம்
தேதி, காலை 10-11 மணி வரை போட்டி நடைபெறும்.
போதுமான
எண்ணிக்கையில் போட்டியாளர்கள் இருப்பின் பள்ளிகள் தங்கள் சொந்த வளாகத்தில்,
திட்டமிட்ட தேதி, நேரத்தில் கடிதம் எழுதும் போட்டியை நடத்தலாம்.
"நீங்கள் வளர
விரும்பும் உலகம் பற்றி சொல்லுங்கள்" என்ற தலைப்பில் ஆங்கிலம் அல்லது
இந்திய அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் பட்டியலிடப்பட்ட மொழியில்
விவரித்து ஒரு கடிதம் எழுத வேண்டும்.
இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 22-ஆம் தேதி கடைசி நாளாகும். மதுரை, கோவை, திருச்சி ஆகிய மையங்களிலும் போட்டி நடைபெறும்.
ஜி.க.பொன்னுரங்கம்,
உதவி இயக்குநர் (அஞ்சல்,அமைப்பு), அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம், சென்னை
நகர மண்டலம், சென்னை-600002 என்ற முகவரியிலும், pmgccrtca@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரி, 044-28580048,28520430, 28551774 என்ற தொலைபேசி
எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
விவரங்களுக்கு அந்தந்த நகரங்களில் உள்ள அஞ்சல் துறைத் தலைவர்களையும்
அணுகலாம் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர்
தெரிவித்துள்ளார்.