Wednesday, May 6, 2015
Sunday, April 26, 2015
வரும் கல்வியாண்டு முதல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு.........
வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை
கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து
வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில், பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: மாணவருடன்
ஆசிரியை ஓட்டம் பிடித்தல், மாணவியரிடம் ஆசிரியர் தவறான நோக்கத்தில் நடந்து
கொள்ளுதல் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதனால் கல்வித் துறையில்,
ஒழுக்கக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. எனவே, சில கட்டுப்பாடுகள் விதிக்க
ஆலோசிக்கப்படுகிறது.
அதன்படி,
* ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.
* இளம் வயது ஆசிரியர்கள் ஜீன்ஸ் பேன்ட், இறுக்கமான சட்டை போடக் கூடாது.
* பள்ளிகளில், ஆசிரியர், மாணவ, மாணவியர் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.
* ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனை, தலைமை ஆசிரியர் அல்லது அலுவலகத்தில் வைத்து விட்டு, வகுப்பறைக்கு செல்ல வேண்டும்.
* மாணவ, மாணவியருக்கு மொபைல் போனே வேண் டாம்; அவசரத் தேவைக்கு பள்ளி போனை
பயன்படுத்தலாம். இது போன்ற கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து, பல்துறை
நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டு பின், முடிவு செய்யப்படும். இவ்வாறு,
கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Wednesday, April 22, 2015
Tuesday, March 31, 2015
Saturday, March 28, 2015
பி.எட் கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு ...
Thursday, March 26, 2015
தேசியத் திறனாய்வுத் தேர்வு (NTSE ) நவம்பர் 2014 தேர்வானோர் பட்டியல்
http://www.dge.tn.gov.in/NTSE/NTSE_November2014.pdf
Subscribe to:
Posts (Atom)