Wednesday, August 26, 2015
Tuesday, August 11, 2015
Tuesday, July 28, 2015
Sunday, July 19, 2015
மாவட்ட செயற்குழுக் கூட்டம்.......
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (19.07.2015) கெலமங்கலம் ஒன்றியம் ஆர். குட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் இயக்கதின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வட்டாரக் கிளைகளின் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகப் பேசினார். பின்னர் பேசிய மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் மாவட்டக் கிளையின் செயல்பாடுகள் பற்றியும் இன்றைய கூட்டத் தீர்மானங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார்.
அடுத்து கிளைப் பொருப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
ஆகஸ்ட் 1 அன்று சென்னையில் நடைபெற உள்ள ஜேக்டோ சார்பிலான மாபெரும் தொடர்முழக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் பொருப்பாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுதல்.
தீர்மானம் : 2.
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நமது இயக்க முன்னாள் பொதுச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்களுக்கு இம்மாவட்டச் செயற்குழு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 3.
முகநூலை சமூக அக்கறையோடும், மக்கள் பயன்பாட்டு வழியிலும் பயன்படுத்தி வருவதற்காக காஞ்சி முத்தமிழ் சங்கம் வழங்கும் “முகநூல் வேந்தர்” விருது பெறும் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கும், சிறந்த சமூகச் சேவைக்காக “அன்னை தெரேசா விருது” மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி மா. ஜோதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 4.
இதுவரையில் 2015ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை முடிக்காத கிளைகள் உடன் முடித்து இம்மாத இறுதிக்குள் மாவட்ட/மாநில பங்குத் தொகைகளை செலுத்திட முடிவு செய்யப்படுகிறது.
Saturday, July 18, 2015
3120 பக்க NMMS RESULT ல் தேர்வான மாணவர்களின் பெயர்களை காண்பது எப்படி?
Tuesday, July 14, 2015
Subscribe to:
Posts (Atom)