கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு
(ஜேக்டோ) சார்பிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத்தின் 10 ஒன்றியங்களில் இருந்து துவக்க/நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்/மேல்நிலைப்
பள்ளிகளில் இருந்தும் சுமார் 1000 ஆண் ஆசிரியர்களும்
சுமார் 2000 பெண் ஆசிரியர்களும் ஆக சுமார்
3000 பேர் கலந்துக்கொண்ட மிக பிரமாண்டமான ஆர்ப்பாட்டக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்டம் முழுமையும் இன்று 95% அளவிலான ஆசிரியர்கள் இன்றைய ஒருநாள் வேலை நிறுத்தத்தில்
பங்கேற்று உள்ளார்கள் என்ற செய்தியோடு துவங்கிய ஆர்ப்பாட்டக் கூட்டம் மிகச்சிறப்பாக
நடைபெற்றது.
ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கழகத்தின்
நிறுவனத் தலைவரும் ஜேக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினருமான திரு அ. மாயவன் அவர்களும்,
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலத் தலைவரும், ஜேக்டோ பொதுக் குழு
உறுப்பினருமான திரு இலா. தியோடர் ராபின்சன்
அவர்களும் சிறப்புரை ஆற்றினர். தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் திரு செ.
இராஜேந்திரன் உள்ளிட்ட அனைத்து சங்க மாவட்டப் பொருப்பாளர்களும் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர்.