Friday, May 20, 2016
பலரின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்த ””நோட்டா””
'நோட்டா'வுக்கு ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்கு
தமிழகத்தில் நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீதம் ஆகும்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில், லட்சக்கணக்கானோர் எந்த கட்சிக்கும் வாக்கில்லை என்பதைகுறிப்பிடும் விதமாக நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகள் பெற்ற வாக்கைவிட நோட்டாவுக்கு அதிகமாக வாக்கு கிடைத்துள்ளது.கோவையில், 10 தொகுதிகளிலும் பதிவான நோட்டா மற்ற எல்லா தொகுதிகளிலும் பதிவான நோட்டாவைக் காட்டிலும் மிக மிக அதிகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு. .
தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய
அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய
அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லியில் இன்று காலை
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நிகழாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை முதல் கட்டமாக மே 1, இரண்டாம் கட்டமாக ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.மேலும், இந்தத் தேர்வுகளின் முடிவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் செப்டம்பர் 30ஆம்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக அரசு, வேலூர் சிஎம்சி உள்ளிட்டபல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது.
சங்கல்ப அறக்கட்டளை என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில்"நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது' என முறையிட்டிருந்தது.இந்நிலையில் தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Sunday, April 3, 2016
Friday, March 4, 2016
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு
பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 -தொடக்க, நடுநிலை,
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் விருது பெறுவதற்கு தகுதி
வாய்ந்த ஆசிரியர்களை தேர்தெடுக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து உத்தரவு -
இயக்குனர் செயல்முறைகள்
பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம்
Subscribe to:
Posts (Atom)