Friday, May 20, 2016

தமிழக பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை - கலந்தாய்வு விண்ணப்ப நாள் அறிவிப்பு....

TAMIL NADU ENGINEERING ADMISSIONS - 2016 (TNEA 2016) | LAST DATE 25.05.2016

TAMIL NADU ENGINEERING ADMISSIONS - 2016 (TNEA)

தமிழ்நாடு முழுவதும் 538 அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள 2 லட்சம் இடங்களை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு நடத்த உள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக பிளஸ்- 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.இதுவரை, 190438 மாணவ - மாணவிகள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 118079 பேர் விண்ணப்பத்திற்கான பணத்தையும் செலுத்தியுள்ளனர்.
பதிவு செய்த மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவந்த பிறகு அவர்கள் எடுத்த மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவு செய்து, பின்னர் அதை பதிவிறக்கம் செய்து, பிளஸ்-2 முடிவு வெளியான 10 நாட்களுக்குள் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்துசேரும்படி தபாலில் அனுப்ப வேண்டும்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பு.


பலரின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்த ””நோட்டா””

'நோட்டா'வுக்கு ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்கு

தமிழகத்தில் நோட்டாவுக்கு 5,61,244 பேர் வாக்களித்துள்ளனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் 1.3 சதவீதம் ஆகும்.

              தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 232 தொகுதிகளில் 74.26 சதவீத வாக்குகள் பதிவாகின.மேலும், இது கடந்த சட்டப்பேரவை தேர்தலை விட பல மடங்கு அதிகம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இதில், லட்சக்கணக்கானோர் எந்த கட்சிக்கும் வாக்கில்லை என்பதைகுறிப்பிடும் விதமாக நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகள் பெற்ற வாக்கைவிட நோட்டாவுக்கு அதிகமாக வாக்கு கிடைத்துள்ளது.கோவையில், 10 தொகுதிகளிலும் பதிவான நோட்டா மற்ற எல்லா தொகுதிகளிலும் பதிவான நோட்டாவைக் காட்டிலும் மிக மிக அதிகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு. .

              தேசிய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
 
           இதற்கான அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.நிகழாண்டிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை முதல் கட்டமாக மே 1, இரண்டாம் கட்டமாக ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்தது.மேலும், இந்தத் தேர்வுகளின் முடிவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் செப்டம்பர் 30ஆம்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரத்தில் தமிழக அரசு, வேலூர் சிஎம்சி உள்ளிட்டபல்வேறு தனியார் மருத்துவக் கல்லூரிகள் தாக்கல் செய்த மனுக்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய பள்ளிக் கல்வி வாரியம் மனு தாக்கல் செய்திருந்தது.

சங்கல்ப அறக்கட்டளை என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில்"நுழைவுத் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் அதை அமல்படுத்தாமல் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது' என முறையிட்டிருந்தது.இந்நிலையில் தில்லியில் இன்று காலை மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை ஓராண்டு ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sunday, April 3, 2016

தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை - அரசாணைக்கு தெளிவுரை கடிதம்



                 தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை, இறந்த, பணி ஓய்வு பெற்ற, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு முடித்தல் சார்பான அரசாணைக்கு தெளிவுரை கடிதம் நாள் : 01. 04. 2016
 

Friday, March 4, 2016

தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் தயாரிக்க உத்தரவு

          பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 -தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்தெடுக்க மாவட்ட வாரியாக குழு அமைத்து உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம்

1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள்