வட்டாரச் செயற்குழுக் கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை
வட்டாரக் கிளையின் செயற்குழுக் கூட்டம் இன்று ஊத்தங்கரை துவக்கப் பள்ளியில்
நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் திரு கி. கோபால்
அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே.
லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக்
கலந்துக்கொண்ட மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் இயக்கத்தின் மாவட்ட, மாநிலச் செயல்பாடுகள் பற்றியும், வரும்
09.07.2016 அன்று நடைபெற உள்ள வட்டாத் தேர்தல் மற்றும் 2407.2016 அன்று ஒசூரில்
மாநிலப் பொருப்பாளர்கள் பங்குபெறும் சிறப்புக்கூட்டம் பற்றியும் விரிவாக
எடுத்துக்கூறி அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் : 1.
வரும்
09.07.2016 அன்று வட்டாரத் தேர்தலை முறையாகவும், சிறப்பாகவும் நடத்துதல்
தீர்மானம் : 2.
வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய
துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாலாளர் மற்றும்
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள்
கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள்
பங்கேற்பது.
தீர்மானம் : 3.
மத்திய
அரசு அறிவித்துள்ள புதிய ஊதியக்குழு அறிவிப்புகளை ஏற்று மாநில அரசும் அரசும்
விரைந்து ஊதியக்குழு அமைத்து ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.
தீர்மானம் : 4.
அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர்
எண்ணிக்கையை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு புதிதாக அங்கீகாரம்
வழங்குவதை மாநில அரசு நிறுத்திட வேண்டும்.
தீர்மானம் : 5.
அரசு
துவக்க/நடுநிலைப் பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களை இணைத்து அதில் முறையான எல்கேஜி,
யுகேஜி வகுப்புகள் நடைபெற உரிய நடவடிக்கை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
இறுதியில் வட்டார மகளிர் அணிச் செயலாளர் திருமதி
க. தமிழ்ச் செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.