மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி
மாவட்டக் கிளையின் செயற்குழுக் கூட்டம் 03.07.2016ல் சூளகிரி துவக்கப் பள்ளியில்
நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு செ.
இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக சூளகிரி வட்டாரச்
செயலாளர் திரு இரா. இராஜேஸ் எபனேசர் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்துக்கொண்டு தலைமை உரையாற்ரிய
மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் இயக்கத்தின் மாவட்ட, மாநிலச்
செயல்பாடுகள் பற்றியும், வரும் நடைபெற உள்ள வட்டாத் தேர்தல்கள் மற்றும் வரும்
24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின்
கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாளர் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள்
கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி அனைவரும்
அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை
அவர்கள் இயக்கச் செயல்பாடுகள் பற்றியும், நடைபெற உள்ள வட்டாரத் தேர்தல்கள் அதற்கான
நடைமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.
அதன் பின்னர் மாவட்டத்துணைப்
பொருப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து வட்டார பொருப்பாளர்கள் கருத்துரை வழங்கினர்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள்
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தீர்மானம் : 1.
வரும்
09.07.2016 அன்று ஊத்தங்கரை, 10.07.2016 அன்று மத்தூர், கெலமங்கலம், தளி,
17.07.2016 அன்று ஒசூர், சூளகிரி ஆகிய வட்டாரங்களில் தேர்தலை முறையாகவும், சிறப்பாகவும்
நடத்துதல்
தீர்மானம் : 2.
வரும் 24.07.2016 அன்று ஒசூரில் அகில இந்திய
துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்தியச் செயலாளர் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருப்பாளர்கள்
கலந்துக் கொள்ளும் சிறப்புக் கூட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள்
பங்கேற்கச் செய்து கூட்டத்தை சிறப்பாக நடத்துதல்.
தீர்மானம் : 3.
மத்திய
அரசு அறிவித்துள்ள புதிய ஊதியக்குழு அறிவிப்புகளை ஏற்று மாநில அரசும் அரசும்
விரைந்து ஊதியக்குழு அமைத்து, ஆறாவது ஊதியக் குழுவில் ஏற்பட்ட குறைகளை களைந்து,
புதிய ஊதிய மாற்றம் செய்திட வேண்டும்.
தீர்மானம் : 4.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை ஒளிவு
மறைவின்றி விரைந்து நடத்திட மாநில அரசு னடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீர்மானம் : 5.
அரசு
புதிய நடுநிலைப் பள்ளிகளில் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பாடங்களை கற்பிக்க தமிழ் மற்றும் வரலாறு பட்டதாரி ஆசிரியர்களை பதவி
உயர்வு மூலம் நியமிக்க உரிய நடவடிக்கை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும்.
தீர்மானம் : 6.
தற்போது
நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்ட காலவரையரை முடிவடைந்து விட்டதால் விரைந்து புதிய திட்டம்
துவக்கிடவும், அதில் அரசு ஊழியர் தமது பெற்றோர்களையும் இணைத்துக்கொள்ளவும், மாநிலத்தின்
எந்த மருத்துவமணையிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளவும் உரிய திருத்தம் தமிழக அரசு
செய்திட வேண்டும்.
தீர்மானம் : 7.
உதவித்
தொடக்கக் கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படும் ஆசிரியர் பணிப் பதிவேடுகளில் கடந்த
10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவருக்கு கூட வாரிதாரர் உள்ளிட்ட பதிவுகள்
செய்யப்படாமல் உள்ளதை கவனத்தில் கொண்டு அனைத்து பதிவுகளை முறையாக செய்திட
மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள்
உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட தலைமை நிலையச்
செயலாளர் திரு து. மனுநீதி உள்ளிட்ட அனைத்து வட்டார பொருப்பாளர்களும் கலந்துக்கொண்டு
சிறப்பித்தனர்
இறுதியில் மாவட்டப் பொருளாளர் திருஅ.செ.நவீத்அக்பர்
அனைவருக்கும் நன்றி கூறினார்.