Monday, August 1, 2016

2016 - 2017 ஆம் கல்வியாண்டிற்கான உதவி /கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் முன்னுரிமைப்பட்டியல்
















மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சந்திப்பு.....

                தமிழக ஆசிரியர் கூட்டணியின் புதிதாக தேர்வு செய்யப்பட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்களுடன் இணைந்து மாவட்டக் கல்வி அலுவலரை மரியாதை நிமித்த சந்திக்கும் நிகழ்வு இன்று 01.08.2016 மாலை கிருஷ்ணகிரி மாவட்டத் தொடக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

        மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை  அவர்களின் வழிகாட்டலின் படி நிகழ்ந்த சந்திப்பில் மாவட்டப் துணைப் பொருப்பாளர்களும், ஊத்தங்கரை, ஒசூர், மத்தூர், கெலமங்கலம், தளி, சூளகிரி ஆகிய வட்டாரப் பொருப்பாளர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். 
          சந்திப்பின் போது மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் திரு ஜெ. பாபு அவர்கள் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
        அப்போது நடைபெற உள்ள பொது மாறுதல் கலந்தாய்வின் போது, ஆசிரியர்களுக்கு எவ்வித இடற்பாடுகளும் ஏற்படாவண்ணம் முறையாகவும், சிறப்பாகவும் நடத்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.