ஊத்தங்கரை
வட்டாரக் கல்வி அலுவலகத்தில்
புதிதாக வட்டாரக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுள்ள திரு என்.ஏ.பி.நாசர் அவர்களையும், தற்போது பணியில் உள்ள வட்டாரக் கல்வி
அலுவலர் திருமதி கோ.மாதேஸ்வரி அவர்களையும் தமிழக ஆசிரியர் கூட்டணியின் மத்தூர்
கல்வி மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் ஊத்தங்கரை
வட்டாரப் பொருப்பாளர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டதோடு,
பள்ளி நடைமுறைகள், கற்றல்/கற்பித்தல் மற்றும் ஒன்றியத்தின் கல்வி வளர்ச்சி குறித்தும்
கலந்துரையாடினர்.
நிகழ்வில் ஊத்தங்கரை வட்டாரத் தலைவர் திரு
கி. நாகேஷ், வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், வட்டாரப் பொருளாளர் திரு
பி. இராமாண்டவர், வட்டார மகளிர் அணிச்
செயலாளர் திருமதி செ. சித்ரா, வட்டார துணைத்
தலைவர் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, வட்டார துணைச் செயலாளர் திருமதி இரா. சாந்தா, மற்றும் மாவட்டப் பொருளாளர்
திரு த. செல்வம், ஆசிரியர்கள் ஆ.மணிவண்ணன், அருள்ராஜ், மு.இலட்சுமி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.