Monday, June 27, 2022
Saturday, June 25, 2022
பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் - அரசாணை வெளியீடு......
2022-2023ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் குறித்து கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.
“ ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் சென்னையில் நடைபெறும் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சதுரங்கம் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி , வட்டாரம் , மாவட்டம் மற்றும் மாநில அளவில் சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டம் ரூ .1 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மாணவர்களின் நுண்ணறிவுத் திறன் , செயல்பாட்டுத் திறன் , ஆளுமைத் திறன் என பல்வேறு திறன்களை சதுரங்கப் போட்டிகளின் வழியே வெளிக்கொணர பள்ளியளவில் தொடங்கி மாவட்ட , மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகள் நடத்திடவும் , சென்னையில் வரும் ஜீலை , ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகளில் அரசுப் பள்ளி மாணவர்களை பார்வையாளர்களாக பங்கேற்கச் செய்திடவும் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட மேற்காண் அறிவிப்பு குறித்து மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி ஆணையரின் பின்வரும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆசிரியர்கள், மாணவர்களுக்கான மாத இதழ் - அரசாணை வெளியீடு.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தொடக்க வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஊஞ்சல் இதழ், உயர் வகுப்பு மாணவர்களுக்கு தேன்சிட்டு இதழ் மற்றும் ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் மாத இதழ் வெளியிடுதல் - அரசாணை வெளியீடு!
SGT / BT ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு...
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் SGT / BT ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும் தேதி அறிவிப்பு - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்....
Tuesday, June 21, 2022
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - கல்லூரி கல்வி இயக்குநர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஜுன் 22 முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
www.tngasa.in
www / tngasa.org
என்ற இணையதள முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவுசெய்ய ஜூலை 7 ம் தேதி இறுதிநாள் ஆகும் என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் SMC மறு கட்டமைப்பு கூட்ட தேதியில் மாற்றம்.......
02.07.2022க்குப் பதிலாக 09.07.2022 அன்று அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைத்தல் சார்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்......
ரூ.1000 கல்வி உதவித் தொகை - சான்றிதழ் பெற உத்தரவு.
மாணவியரிடம் இருந்து சான்றிதழ்கள்,
வங்கிக்கணக்கு எண்
உள்ளிட்டவற்றை பெற கல்லூரிகளின் முதல்வர்களுக்கு, உயர்கல்வித்துறை உத்தரவு.