ஆசிரியர்கள் தங்களது சுய மதிப்பீட்டு படிவத்தை ( Self Evaluation ) EMIS வலைதளத்தில் தமிழ் (அல்லது) ஆங்கில வழியில் UPDATE செய்வதற்கான முழுமையான விளக்கம்.......
Tuesday, September 13, 2022
Tuesday, August 9, 2022
G.O 220 - டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்கள் தேர்வு - புதிய நடைமுறைகள் வெளியீடு........
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டது. 38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறினார். ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் CEO தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்தாண்டு நல்லாசிரியர் தேசிய விருதுக்கு ஆசிரியர்களை பரிந்துரை செய்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்தாண்டு 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய மாவட்ட, மாநில அளிவில் குழு அமைக்கப்பட்டுள்ளது. விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும்; கற்றல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Monday, August 8, 2022
அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ........
வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் வரை தமிழகத்திலுள்ள " அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி " ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும் , 75 வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள , அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.