Wednesday, December 7, 2022

மாநில அளவிலான கலைத் திருவிழா - போட்டிகள் நடைபெறும் நாட்கள் அறிவிப்பு.......

 நிர்வாக காரணங்களுக்காக மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் 27.12.2022 முதல் 30.12.2022 வரை நடைபெற உள்ளன.



இனி அனைத்து நலத்திட்டங்களும் EMISல் பதிவாகி உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே - பள்ளிக் கல்வித்துறை........

 

அனைத்து வகை அரசு / அரசு உதவி / பகுதி நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கல்வி தகவல் மேலாண்மை மையத்திடமிருந்து ( EMIS ) பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


 இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் 2023-2024 கல்வியாண்டிற்கு அனைத்து வகை நலத்திட்டங்களும் மாணாக்கர்களுக்கு வழங்க வேண்டியுள்ளதால் முதன்மை கல்வி அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை சரிபார்த்து அதில் வேறுபாடு இருப்பின் அதனையும் EMIS - இல் 16.12.2022 - க்குள் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


இனி வருங்காலங்களில் முதன்மை கல்வி அலுவலரால் பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமே சார்ந்த நலத்திட்டங்களுக்கான தேவைப்பட்டியலாக ( Indent ) எடுத்துக்கொள்ளப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை  தெரிவித்துள்ளது.

பகுதி நேரப் பயிற்றுநர்கள் (ஓவியம்) கலந்தாய்வு 13/12/2022க்கு ஒத்திவைப்பு.......

 

தற்காலிக பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ( ஓவியம் ) விருப்ப மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 06.12.2022 வரை நீட்டிக்கப்படுகிறது.


மேலும் , பணியிட மாறுதல் கலந்தாய்வு 13.12.2022 செவ்வாய் கிழமை அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வியில் பயின்ற படிப்பும், கல்லூரி படிப்புக்கு இணையானது - UGC கடிதம்........

 தொலைதூரக்கல்வியில்  பயின்ற படிப்பும் கல்லூரி படிப்புக்கு இணையானதே UGC உத்தரவு நகல்.


மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி.........

 

மூன்றாம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி வட்டார அளவில் ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல் 04.01.2023 வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. 


எண்ணும் எழுத்தும் மாநில அளவிலான பயிற்சி

15..12.22
16.12.22
17.12.22

மாவட்ட அளவிலான பயிற்சி

19.12.22
20.12.22
21.12.22

ஒன்றிய அளவிலான பயிற்சி

02.01.23
03.01.23
04.01.23

முன்னதாக பயிற்சி தொடர்பான மாநில மற்றும் மாவட்ட கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவது குறித்த கடிதம்......

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு....

 

GO NO : 219 , Date : 02.12.2022

இடைநிலை ஆசிரியர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களையும் சேர்த்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு நிலை வழ்குதல் அரசாணை வெளியீடு

CONT.P.No.1355 of 2022 & BATCH COMPLIANCE ORDER - Download here

நேரடி பட்டதாரிகளையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும்: உயா் நீதிமன்றம்......

 கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்கும் வகையில் ஆசிரியா் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்த நித்யா, ஆங்கில பாடப் பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியராக பதவி உயா்வு வழங்க கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி.எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘மனுதாரா், தமிழ் பாடப்பிரிவில் பி.எட்., படிப்பை முடித்துள்ளாா். அதன்பின்னா், இளநிலை ஆங்கிலத்தை தொலைநிலைக் கல்வி முறையின் கீழ் படித்துள்ளாா். எனவே, மனுதாரா் பதவி உயா்வுக்கு தகுதி பெறவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தமிழ் பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியா் பதவி உயா்வுக்கு மனுதாரரை பரிசீலிக்கலாம் என உத்தரவிட்டாா்.

மேலும், கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல வழக்குகளில் தீா்ப்பளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் படித்தவா்கள் ஆசிரியா் பணிக்குத் தகுதியானவா்கள் அல்ல. இட ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் மேற்கொள்வதாக இருந்தாலும் கூட, தகுதியானவா்களையே ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தற்போது ஆசிரியா்களாக உள்ள பெரும்பாலானோா் கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று படிக்காதவா்களாக இருப்பது துரதிா்ஷ்டவசமானது.

அகில இந்திய அளவில் கல்வியின் தரத்தில் தமிழகம் 27-ஆவது இடத்தில் உள்ளது. கல்விக்கு ஆண்டுக்கு ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், பெருந்தொகை ஆசிரியா்கள் ஊதியத்துக்கே செலவிடப்படுகிறது.

ஆசிரியா்கள் நியமனம் தொடா்பான திட்டத்தை மூன்று மாதங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறை செயலாளா்களுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்