Wednesday, May 14, 2014

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் - எம்பிபிஎஸ்

              சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களுக்கும் துவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

    விண்ணப்ப விநியோகம் கடந்த மே 2-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. விண்ணப்ப விற்பனை ஜூன் 10-ஆம் தேதி வரைநடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும்ஜூன் 11-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அண்ணாமலை நகரில் உள்ள பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்திலும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொலை தூரக் கல்வி இயக்கக படிப்பு மையங்களிலும் ரூ.1500 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.


     அஞ்சல் மூலம்: அஞ்சல் மூலம் விண்ணப்பம் பெற விரும்புவர்கள் ரூ.1550-க்கான (ரூ.50 அஞ்சல் கட்டணம் சேர்த்து) சென்னையில் மாற்றத்தக்க வங்கி வரைவோலையை ​(D‌e‌m​a‌n‌d D‌r​a‌f‌t)​ பதிவாளர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ​(R‌e‌g‌i‌s‌t‌r​a‌r,​​ A‌n‌n​a‌m​a‌l​a‌i U‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y)​ என்ற பெயரில் எடுத்து பதிவாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்-608002 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
  தனி கலந்தாய்வு: மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே அனுமதி சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு விதிப்படியும், மாணவர்கள் மேல்நிலைப் படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்படும்.

  சேர்க்கைக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய இரு படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானது என்கிறார் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா.

எத்தனை இடங்கள்? எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களும் உள்ளன.

கட்டணம்: எம்பிபிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.5,54,370; பிடிஎஸ் படிப்பிற்கான ஆண்டு கட்டணம் ரூ.3,50,370.

   விண்ணப்பங்கள் மற்றும் அனுமதி சேர்க்கை குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் w‌w‌w.a‌n‌n​a‌m​a‌l​a‌i‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.ac.‌i‌n-​இல் தெரிந்து கொள்ளலாம். மேலும் பல்கலைக்கழக உதவி மைய தொலைபேசி எண்கள் 04144- 238348, 238349 ஆகியவற்றை தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Monday, May 5, 2014

திறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று வெளியீடு

            கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின் முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
            தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட (NMMS) தேர்வு கடந்த பிப்ரவரியில் நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவு மே 5-ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இணையதளம் www.tndge.in மூலம் அறிந்துகொள்ளலாம்.
                8-ம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு திறனாய்வுத் தேர்வை தமிழகத்தில் 1.47 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வில் வெற்றிபெறும் 6,695 பேருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT

CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST

Tuesday, April 29, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் தீர்ப்பு வெளியானது

ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் தீர்ப்பு வெளியானது. வெயிட்டேஜ் கணக்கிடுவதில் மாற்றம் செய்ய நீதிபதி உத்திரவு

            5% சதவீத சலுகை மதிப்பெண் 2012 ஆம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்படாதது சரியே.
           மேலும் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுவதில் மாற்ரம் செய்ய அறிவுரை வழங்கி நீதிமன்றம் உத்திரவு

TET CASES JUDGEMENT HAS ANNOUNCED 2012 CANDIDATES 5% CAN NOT GIVE RELAXATION. BECAUSE THAT PROCESS ALREADY FULLY COMPLETED.

 2013 CANDIDATES 5% STANDS CORRECT.

 WEIGHTAGE SHOULD CONSIDER SCIENTIFIC METHOD

(INSTEAD OF MECHANICAL METHOD)


 12th obtained marks converted to 10

   eg. 85% = 8.5 marks
 degree converted to 15

eg. obtained percentage/ 100 X 15

 B.ed obtained percentage/ 100 X 15

 tet mark= obtained tet mark/150 X 60

Thursday, April 3, 2014

10% அகவிலைப்படி உயர்வு அரசாணை

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அரசாணை வெளியிடப்பட்டது

http://cms.tn.gov.in/sites/default/files/gos/fin_e_96_04_2014.pdf

Tuesday, March 18, 2014

கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம்

          தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு