Wednesday, June 11, 2014

பொறியியல் கல்வி - ரேண்டம் எண்

அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்பில் சேர விண்ணபித்துள்ளவர்களுக்கான ரேண்டம் எண் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
http://www.annauniv.edu/cgi-bin/r1a2n3d4o5m6/rawdata.pl

Tuesday, June 10, 2014

2014-15ம் ஆண்டு - ஆசிரியர் பொது மாறுதல்

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / மாநகராட்சி தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் - 2014-15ம் ஆண்டில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

Sunday, June 8, 2014

தமிழக ஆசிரியர் கூட்டணி – மாநிலத் தேர்தல்


    தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தேர்தல் 07.06.2014 அன்று திருச்சி சுமங்கலி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தேர்தலை கரூர் மாவட்டச் செயலாளர் திரு பி. தமிழ்ச்செல்வன், நாகை மாவட்டச் செயலாளர் திரு தங்க. சேகர் ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக இருந்து நடத்திக் கொடுத்தனர்.
இது இயக்கம் துவங்கியதில் இருந்து நடைபெறும் 10 ஆவது மாநிலத் தேர்தல் ஆகும். இத்தேர்தலில் 32 மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வாக்காளர்களும், 200க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும் வந்து கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
தேர்தல் நடைமுறைகள் முற்பகல் சரியாக 10.30க்கு திட்டமிட்டபடி துவங்கியது. அப்போது தேர்தல் ஆணையாளர்கள் முறைப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டனர். தொடர்ந்து   தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் சார்பாக  வேட்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவை முறையாக முன்மொழிதல், வழிமொழிதல்களோடு போட்டியிட விரும்பிய வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளர்களிடம் வழங்கினர்.
உரிய கால அவகாசத்திற்குப் பின் வேட்பாளர்கள் விண்ணப்பங்கள் பரிசீலணை செய்யப்பட்டதில் பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் முறையாக ஏற்பு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட வேண்டிய பதவிகளுக்கு முறையே தலா ஒரு விண்ணப்பம் மட்டுமே பெறப்பட்டுள்ளமையால் இன்றைய மாநிலத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த அனைவருமே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக மாநிலம் முழுவதிலுமிருந்து வந்திருந்த அனைத்து ஆசிரியர்களின் பெருத்த கர ஒலிகளுக்கிடையே  தேர்தல் ஆணையாளர்கள் கூட்டாக அறிவித்தனர்.
அதில் கீழ்க்கண்ட ஆசிரியர்கள் மாநிலப் பொறுப்பாளர்களாக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். 
1.      மாநிலத் தலைவர் :     திரு அ. வின்சென்ட் பால்ராஜ்
 (திண்டுக்கல் மாவட்டம்)
2. பொதுச் செயலாளர் :    திரு . கோ முருகேசன்
 (சேலம் மாவட்டம்)
3. மாநிலப் பொருளாளர் : திரு மா. நம்பிராஜ்
 ( அரியலூர் மாவட்டம்)
4. மா.துணைத் தலைவர் :  திரு த இராமதாசு
 (விழுப்புரம் மாவட்டம்)
  மா.துணைத் தலைவர் :  திரு அ. எழிலரசன்
 ( தஞ்சை மாவட்டம்)
5. மா.து. பொதுச் செயலர்:  திரு அ. முனியாண்டி
 (விருதுநகர் மாவட்டம்)
6. மா.துணைச் செயலாளர்: திரு ஒ.கோ. செந்தில்குமார்
 (கோவை மாவட்டம்)
7. மா. அ. செயலாளர்:      திரு இரா. இராஜசேகரன்
 (திருச்சி மாவட்டம்)
8. மா.த.நி. செயலாளர்:     திரு வ.மி.ஹபிபுர் ரஹ்மான்
 (கிருஷ்ணகிரி மாவட்டம்)
9. மா.ம.அணி செயலாளர்: திருமதி செ. மார்கரெட் சில்வியா

இத்தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட அனைவருமே தற்போது ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. மேலும் அனைவருமே ஒரு பதவியில் மட்டுமே இருக்க தகுதிபெற்றவர்கள் ஆவர். (தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க விதிகளின் படி பணியில் இருப்பவர் மட்டுமே பொறுப்பாளர் பதவி வகிக்க முடியும். அத்தோடு ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும்)
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் அனைத்து பொறுப்பாளர்களும் முறைப்படி இயக்க உறுதி மொழியை கூறி தமது பொருப்புகளை ஏற்றுக்கொண்டனர்.
     பின்னர் புதிய பொறுப்பாளர்கள் அனைவரும் தனித்தனியாக,  தம்மை போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு தாம் ஏற்றுள்ள பொறுப்பில் திறம்பட  செயல்படுவதோடு, இயக்க வளர்ச்சியில் மேலும் தம்மை ஈடுபடுத்திக்கொள்வோம் என்றும் உறுதி அளித்தனர்.

இன்றைய நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்த்கிரன் அவர்கள் தமிழக ஆசிரியர் கூட்டணியின் இயக்க இதழான “ஆசிரியர் இயக்க குரல்” க்கான இதழ் காப்பாளர் நிதி ரூபாய் 5000/- வழங்கினார்.

இறுதியில் அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு, அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் புதிய பொறுப்பாளர்கள் அனைவரின் பணியும் சிறக்க வாழ்த்திப் பேசினார்.