1675 புதிய நியமனம் செய்யப்படவுள்ள இடைநிலை ஆசிரியர்கள் 08.09.2014 அன்று பணியில் சேர இயக்குனர் உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி
பெற்று 1675 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான பணி நியமன
கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அக்கலந்தாய்விற்கான கால அட்டவணை கீழ்காணும் விவரப்படி நடக்கவுள்ளது.
* 01.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் கலந்தாய்வு நடைபெறும்
* 02.09.2014 - இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறும்.
ஆசிரியர்களுக்கு மேற்படி கலந்தாய்வு தேதியன்று பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
* 04.09.2014 முதல் 06.09.2014 வரை -
சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இடைநிலை
ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* 08.09.2014 - புதிய இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேர வேண்டும்.