தமிழக ஆசிரியர் கூட்டணி ஊத்தங்கரை
வட்டாரக் கிளையின் வட்டாரத் தேர்தலும், தொடர்ந்து சிறப்பு பொதுக்குழுக் கூட்டமும்
இன்று (09.07.2016)ல்
ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் துவக்கப்
பள்ளியில் நடைபெற்றது.
வட்டாரத் தலைவர் திரு கி.
கோபால் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னதாக வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகவும்
மாவட்டப் பார்வையாளராகவும் கலந்துக்கொண்ட மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் மத்தூர்
வட்டாரச் செயலாளர் திரு ப. தனசேகரன் அவர்கள் தேர்தல் ஆணையாளராகச்
செயல்பட்டு தேர்தலை சிறப்பாக நடத்திக் கொடுத்தார்.
முன்னதாக தேர்தல் ஜனநாயக முறைப்படி தேர்தலில்
போட்டியிட விரும்பும் அனைவரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, பின்னர் அவை பரிசீலனைக்கு
உட்படுத்தப்பட்டு ஏற்கப்பட்டது.
இத்தேர்தலில் ஒரு பதிவிக்கு ஒருவர்
என்ற அடிப்படையில் மட்டுமே போட்டியாளர்கள் விண்ணப்பம் செய்த்து இருந்ததால் தேர்தல்
அணையாளர் அனைத்து விண்ணப்பங்களையும் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு ஏற்புசெய்து,
அனைத்து பொருப்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
பின்னர் புதிதாக தேர்வு
செய்யப்பட்டுள்ள அனைத்து பொருப்பாளர்களுக்கும் பதவி ஏற்பும் உறுதிமொழி ஏற்பையும் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் செய்து வைத்து மாவட்டக்கிளையின்
சார்பில் வாழ்த்தூகளை கூறி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் இயக்கத்தின் மாவட்ட,
மாநிலச் பொருப்பாளர்களின் செயல்பாடுகள் பற்றி விரிவாகக் கூறி, அதுபோல் வட்டாரப்
பொருப்பாளர்களும் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்களின் குறைகள் மற்றும் தேவைகளை
உடனுக்குடன் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களிடம் தெரிவித்து தீர்வு காணவேண்டுமெனவும்
இயலாச் சூழலில் மாவட்ட, மாநில பொருப்பாளர்களிடம் தெரிவித்து தீர்வு காண
வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார், தொடர்ந்து வரும் 24.07.2016 அன்று ஒசூரில் மாநிலப்
பொருப்பாளர்கள் பங்குபெறும் சிறப்புக்கூட்டம் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறி
அனைவரும் அதில் சிறப்பாக பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
கீழ்க்கண்ட
பொருப்பாளர்கள் பொருப்பாளர்கள் :
வட்டாரத் தலைவர் : திரு
கி. கோபால்
வட்டாரச் செயயலாளர் : திரு சே. லீலாகிருஷ்ணன்
வட்டாரப் பொருளாளர் : திரு த. செல்வம்
மகளிர் அணிச் செயலாளர் : திருமதி
க. தமிழ்ச்செல்வி
துணைத் தலைவர் : திரு
கி. நாகேஷ்
துணைச் செயலாளர் : திருமதி இரா. சாந்தா
மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் :
1.
திருமதி
ச. சித்ரா
2.
திரு
க. சக்திவேல்
தணிக்கைக்குழு உறுப்பினர்கள் :
1.
திரு
பூ. இராம் குமார்
2.
திரு
இரா. இராமாண்டவர்
வட்டாச் செயற்குழு உறுப்பினர்கள் :
1.
திரு
ச. இராஜா
2. திருமதி அ, அனிதா
3.
திருமதி
பொ. கௌரம்மாள்
4.
திருமதி
க. சரஸ்வதி
5.
திருமதி
ஜே. மேனகா
6.
திரு
ஆ. மணிவண்ணன்
7.
திருமதி
மு. இலட்சுமி
8.
திருமதி
த. லதா
9.
திரு
சி. அன்பு
10. திரு அ. முத்துசாமி
இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு த செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.