Saturday, August 25, 2018

தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்புக் கூட்டம்




தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஊத்தங்கரை, மத்தூர் வட்டாரக் கிளைகளின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று (25.08.2018) ல் ஊத்தங்கரையில் நடைபெற்றது.
ஊத்தங்கரை வட்டாரத் தலைவர் திரு கி. நாகேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். மத்தூர் வட்டாரச் செயலாளர் திரு ப. தனசேகர் கருத்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு. செ. இராஜேந்திரன் அவர்கள் கலந்துக் கொண்டார். அவர் தனது சிறப்புரையில் இதுவரையில் வருவாய் மாவட்ட அளவில் செயல்பட்ட கிளைகள், மாநில அமைப்பின் சட்ட விதிகள் திருத்தத்தின் படி, நிர்வாக வசதிக்காக கல்வி மாவட்ட அளவில் செயல்படும் எனவும் அதற்கான புதிய பொருப்பாளர்கள் தேர்வு செய்வது குறித்தும், தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பங்கேற்பு ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஊதியக் குழு முரண்பாடுகள் களையும் குழுக்கள் விரைவில் தனது அறிக்கைகளை வெளியிட வேண்டியதன் அவசியம் குறித்தும், அரசு பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாகப் பேசினார்.
பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
     புதிய மத்தூர் கல்வி மாவட்டத்திற்கு பொருப்பாளர்களாக ஊத்தங்கரை மற்றும் மத்தூர் வட்டாரங்களில் இருந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஒப்புதல் வழங்குதல்.

தீர்மானம் : 2.
     கல்வி மாவட்ட அளவில் கிளைகள் துவக்கப்படுவதால் மாவட்டக் கிளைக்கான முழு அங்கீகாரம் பெறும் வகையில் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 3.
     பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டி தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று நடைமுறையில் உள்ள பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசை கேட்டுகொள்ளல்.
தீர்மானம் : 4.
     இடைநிலை ஆசிரியர் உள்ளிட்டவர்களுக்கு ஊதியக் குழுவில் ஏற்பட்ட  ஊதிய நிர்ணய முரண்பாடுகளை களைய தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் அறிக்கையை விரைவில் பெற்று ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசைக் கேட்டுக்கொள்ளல்
தீர்மானம் : 5.
     தமிழகத்தில் அனைத்து துவக்கப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் குறைந்தது இரண்டு ஆசிரியர் பணி புரியும் நிலையை உறுதி செய்ய தமிழக அரசை வலியுறுத்துதல்.
தீர்மானம் : 6.
     அரசால் பள்ளிகளுக்கு வழங்கப்படும் புதிய தொழிற்நுட்ப வசதிகள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு வசதிகளையும் மாணவர் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க வேண்டல்.
தீர்மானம் : 7.
     மறைந்த முன்னால் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி மற்றும் முன்னால் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாயி ஆகியோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தல்.
இறுதியில் வட்டாரப் பொருளாளர் திரு த செல்வம் அனைவருக்கும் நன்றி கூறினார்.
     கூட்டத்தில் மத்தூர் வட்டாரப் பொருளாளர் க. இராஜேந்திரன், ஊத்தங்கரை வட்டார மகளிர் அணிச் செயலாளர் க. தமிழ்ச்செல்வி, செயற்குழு உறுப்பினர்கள் ஈ. அகிலாண்டேஸ்வரி, ச.சித்ரா, இரா.சாந்தா, க. சரஸ்வதி உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.







Thursday, August 23, 2018

வட்டார கல்வி அலுவலர்- வட்டார வள மையங்களில் மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கு காசோலைகளில் கையொப்பமிடுதல் -சார்பு




பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்.....





மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி செயலாளர் உதயசந்திரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொல்லியல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Full List




Thursday, August 9, 2018

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளில் 95 அரசு மற்றும்நகராட்சி பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் 


உயர்த்தப்பட்டுள்ளன.இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 9முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.எனவே ஏற்கனவே உள்ள காலி இடங்களுடன் புதிதாகஉருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப PGTRB தேர்வு அறிவிப்புவெளியாகும்.