Sunday, September 8, 2024
பள்ளி கலைத் திருவிழா - 2024
ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று (06.09.2024) பள்ளி அளவிலான கலைத் திருவிழா நடைபெற்றது.
வட்டாரக் கல்வி அலுவலர் திருமதி சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தமது உரையில் பள்ளியின் தற்போதைய கல்வித் தரம் மற்றும் பிற செயல்பாடுகளில் மாணவர்களின் ஈடுபாடு ஆகியவற்றை எடுத்துக்கூறி , மாணவர்களின் பன்முகத் திறமைகளை வெளிக்கொணரவே இது போன்ற விழாக்கள் நடத்தப்படுவதாகவும் கூறினார். தொடர்ந்து தலைமை உரையாற்றிய வட்டாரக் கல்வி அலுவலர் இப்பள்ளியின் ப்ன்முகச் செயல்பாடுகளை குறிப்பிட்டு வாழ்த்தியதோடு, பெற்றோர்கள் தமது குழந்தைகளை இப்பள்ளி ஆசிரியர்களை நம்பி விட்டுச் செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விழாவில் பள்ளி மாணவர்கள் பேச்சு, நாட்டுப்புறப் பாடல்கள், செவ்வியல் பாடல்கள், கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல், பலகுரல், நகைச்சுவைப் பேச்சு, கிராமிய நடனம் போன்ற பல்வேறு செயல்பாடுகள் மூலம் தமது திறன்களை வெளிப்படுத்தினர்.
அடுத்து ஊத்தங்கரை சரக அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்று ஒரே அரசு துவக்கப் பள்ளி மாணவியாக, மாவட்ட அளவிலான போட்டிக்குச் செல்லும் மாணவிக்கும், இன்றைய கலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் திருமது க. புவனேஸ்வரி, கெங்கபிராம்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் திருமதி விஜயகுமாரி பிரகாஷ், திரு மணிகண்டன் உள்ளிட்ட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும், பெற்றோர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்துக்கொண்டனர். விழாவை பள்ளி உதவி ஆசிரியர் பூ. இராம்குமார் ஒருங்கிணைத்தார். உதவி ஆசிரியர்கள் சோ. சிவகுருநாதன், மா. யோகலட்சுமி, மு.அனிதா, கணினி பயிற்றுநர் மு.அகிலா ஆகியோர் செய்து இருந்தனர். இறுதியில் உதவி ஆசிரியர் கோ. ஆனந்தன் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Subscribe to:
Posts (Atom)