Sunday, March 8, 2015

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜேக்டோ பேரணி....


           இன்று (08.03.2015) கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் துவக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையிலான அனைத்து நிலை ஆசிரியர் சங்கங்களின் ஆசிரியர்களும்  எழுச்சியுடன் கலந்துக்கொண்டனர். இப்பேரணியில் 3000க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் பங்குபெற்றனர்.
        கிருஷ்ணகிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று மீள அதே இடத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் வந்த இருபால் ஆசிரியர்களும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழங்கினர்.

















































No comments:

Post a Comment