Tuesday, July 28, 2015
Sunday, July 19, 2015
மாவட்ட செயற்குழுக் கூட்டம்.......
தமிழக ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்டக் கிளையின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று (19.07.2015) கெலமங்கலம் ஒன்றியம் ஆர். குட்டூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் திரு தூ. மனுநீதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில் இயக்கதின் பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வட்டாரக் கிளைகளின் செயல்பாடுகள் பற்றியும் விரிவாகப் பேசினார். பின்னர் பேசிய மாவட்டச் செயலாளர் திரு ம. பவுன்துரை அவர்கள் மாவட்டக் கிளையின் செயல்பாடுகள் பற்றியும் இன்றைய கூட்டத் தீர்மானங்கள் பற்றியும் விளக்கிப் பேசினார்.
அடுத்து கிளைப் பொருப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1.
ஆகஸ்ட் 1 அன்று சென்னையில் நடைபெற உள்ள ஜேக்டோ சார்பிலான மாபெரும் தொடர்முழக்க உண்ணாவிரதப் போராட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளில் இருந்தும் பொருப்பாளர்கள் தவறாமல் கலந்துக்கொள்ளுதல்.
தீர்மானம் : 2.
அகில இந்திய துவக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அகில இந்திய செயலாளராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நமது இயக்க முன்னாள் பொதுச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்களுக்கு இம்மாவட்டச் செயற்குழு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 3.
முகநூலை சமூக அக்கறையோடும், மக்கள் பயன்பாட்டு வழியிலும் பயன்படுத்தி வருவதற்காக காஞ்சி முத்தமிழ் சங்கம் வழங்கும் “முகநூல் வேந்தர்” விருது பெறும் மாவட்டத் தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்களுக்கும், சிறந்த சமூகச் சேவைக்காக “அன்னை தெரேசா விருது” மாவட்டத் துணைச் செயலாளர் திருமதி மா. ஜோதி அவர்களுக்கும் இச்செயற்குழு தனது வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 4.
இதுவரையில் 2015ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கையை முடிக்காத கிளைகள் உடன் முடித்து இம்மாத இறுதிக்குள் மாவட்ட/மாநில பங்குத் தொகைகளை செலுத்திட முடிவு செய்யப்படுகிறது.
Saturday, July 18, 2015
3120 பக்க NMMS RESULT ல் தேர்வான மாணவர்களின் பெயர்களை காண்பது எப்படி?
Tuesday, July 14, 2015
Sunday, July 12, 2015
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம்: இந்த ஆண்டு புது நியமனத்திற்கு வாய்ப்பு இல்லை
கடந்த கல்வியாண்டில், ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட,
தற்போதுள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளதால், நடப்பு
கல்வியாண்டில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு
வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும், 5,000க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.
கடந்த கல்வியாண்டின் துவக்கத்தில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற, 3,500 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும்7,000 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என, 10 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
ஓய்வு:
கடந்த மே 31ம் தேதி, தமிழகம் முழுவதும், 4,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இப்பணியிடங்களுக்கு, தகுதித்தேர்வு நடத்தி, விரைவில் பணிநியமனம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு, ஆசிரியர் கல்வி படித்து, வேலைக்கு காத்திருப்போரிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகளில், பணிநிரவல் நடத்துவதற்காக, 1 முதல், 5ம் வகுப்பு வரை, 1:30 என்ற விகிதத்திலும், 6 முதல், 8ம் வகுப்பு வரை, 1:35என்ற ஆசிரியர் - மாணவர் விகிதத்திலும், கடந்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கை அடிப்படையில், கணக்கெடுப்பு செய்யப்பட்டு வருகிறது.இவற்றில், உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை, ஓய்வு பெற்றவர்களின் எண்ணிக்கையை விட, அதிக அளவில் உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில், பணிநிரவல் நடத்தினால்,அனைத்து தகுதியான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்பினால் கூட, உபரி ஆசிரியர் பணியிடம் நீடிக்கும் நிலை உள்ளது.
நிர்பந்தம்:
இதனால், இந்தகல்வியாண்டில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, கல்வித் துறை அலுவலர்கள் கூறியதாவது:
கடந்த முறை ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதனால், உபரி ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர் நியமனம் நடைபெற்றது. உதாரணமாக, ஒரு பள்ளியில் பணிநிரவலுக்கு கணக்கெடுக்கும் போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு, ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே போதுமானதாக இருக்கும்.

ஆனால், அங்கு, எட்டு ஆசிரியர் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த
உபரியாக உள்ள, மூன்று பணியிடங்களை முறையாக நீக்கியிருப்பின், கடந்த
கல்வியாண்டில் புதிய ஆசிரியர் நியமனம், வெகு சொற்பமாகவே இருந்திருக்கும்.
தேர்வு எழுதி காத்திருப்போரை ஏமாற்றம் செய்யக்கூடாது என்பதற்காக, உபரி
ஆசிரியர் பணியிடங்களை நீக்காமல், புதிய ஆசிரியர்களுக்கு பணி
வழங்கப்பட்டது.கடந்த கல்வியாண்டு இறுதியில், 4,000க்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் ஓய்வுபெற்றுள்ள நிலையில், தற் போது பணிநிரவல் நடத்தப்பட்டால்,
மேற்கண்ட உபரி ஆசிரியர் பணியிடங்கள் குறையும். அதே சமயம், பல
ஆசிரியர்களுக்கு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் நிலை கூட உருவாகும்.
அப்போதும், உபரி ஆசிரியர் பணியிடங்களை முற்றிலும் நீக்க முடியாது. இதனால்,
காலி ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வாய்ப்பில்லை. அதே சமயம், அரசு
பள்ளிகளில் ஆண்டுக்காண்டு, மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருவதால்,
நடப்பு கல்வியாண்டில், உபரி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை கூடவும்
வாய்ப்புள்ளது. இந்த காரணங்களால் தான், ஆசிரியர் தகுதித்தேர்வு
நடத்தப்படுவதும் தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Subscribe to:
Posts (Atom)