இன்று ஊத்தங்கரை வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி பொருப்பாளர்கள் மாவட்டத்தலைவர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களைச் சந்தித்தனர். அப்போது மாநில அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள 1152 பக்க மாபெரும் அரசாணைத் தொகுப்பினை அலுவலகப் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது.
மேலும் பெரிய அளவிலான ஆசிரியர்களின் வருங்கால வைப்புநிதி பராமரிப்புப் பதிவேடுகள் இரண்டும் வழங்கப்பட்டது.
அப்போது ஊத்தங்கரை ஒன்றியத்தில் வரும் 09.11.2015 அன்று ஒன்றியம் முழுமைக்குமான உள்ளூர் விடுமுறை அனுமதிக்க வேண்டி கேட்டு உடன் ஒப்புதல் பெறப்பட்டது.
சந்திப்பின்போது வட்டாரத் தலைவர் திரு கி. கோபால், செயலாளர் திரு சே. லீலாகிருஷ்ணன், பொருளாளர் திரு த. செல்வம், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் திரு கி .நாகேஷ், திருமதி பொ.கௌரம்மாள், மற்றும் துணைப் பொருப்பாளர்கள் திருமதி ஈ. அகிலாண்டேஸ்வரி, திருமதி ச.சித்ரா, திருமதி க. சரஸ்வதி, திருமதி இரா. சாந்தா உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment