ஆசிரியர்களின் திறமைக்கு சவால்விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி: இந்த ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு | www.tpo-india.org
‘ஆசிரியர்களின்’ திறமைக்கு சவால் விடும் ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி
டிசம்பர் 9-ம் தேதி நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறுகிறது. இந்த
ஆண்டு முதல்முறையாக தமிழிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்
பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பெயரை பதிவு செய்து
கொள்ளலாம்.
ஆசிரியர்களின் திறமைகளை...
பள்ளி மாணவர்களின் அறிவியல், கணித திறமைகளை கண்டறியும் நோக்கில் கணித
ஒலிம்பியாட், அறிவியல் ஒலிம்பியாட் என பல்வேறு திறனறித் தேர்வுகள்
நடத்தப்படுகின்றன. இதேபோன்று மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்
ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வண்ணம் சென்டா
நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் ‘சென்டா’
ஒலிம்பியாட் போட்டி கடந்த2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த
போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்
வரை அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொள்ளலாம்.
14 வகையான பாடங்கள்
14 வகையான பாடங்களை அவர்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். பாடத்தில் பெற்றுள்ள
நிபுணத்துவம், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல்
பரிமாற்றத்திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இந்த தேர்வு
அமைந்திருக்கும்.அப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வு 2 மணி நேரம்
நடைபெறும்.2017-ம் ஆண்டுக்கான சென்டா ஒலிம்பியாட் போட்டியானது வரும்
டிசம்பர் 9-ம் தேதி தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட நாடு முழுவதும்
28 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டிக்கான தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ்,
தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் நடைபெறும். இதில் கலந்துகொள்ள விரும்பும்
ஆசிரியர்கள் www.tpo-india.org என்ற இணையதளத்தில் தங்கள் பெயரை
பதிவுசெய்துகொள்ள வேண்டும்.‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டிக்கு, தி இந்து,
சென்ட்ரல் ஸ்குயர் பவுண்டேஷன், வர்க்கி பவுண்டேஷன், ஆக்ஸ்போர்டு
யுனிவர்சிட்டி பிரஸ் ஆகியவை இணைந்து ஸ்பான்சர் செய்துள்ளன.
No comments:
Post a Comment