Monday, November 4, 2019

தமிழக ஆசிரியர் கூட்டணி புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு



கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட மத்தூர், ஒசூர், தென்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒசூர் சூடவாடி துவக்கப் பள்ளியில் நடைபெற்ற, தமிழக ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வருவாய்  மாவட்ட சிறப்புச் செயற்குழுக் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு ம. பவுன்துரை அனைவரையும் வரவேற்றார்.
மத்தூர் கல்வி மாவட்டச் செயலாளர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தமது கருத்துரையில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட இயக்கச் செயல்பாடுகள் குறித்தும், மாநில,மாவட்ட, வட்டார உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் உணர்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களின் கருத்துரைகளுக்குப் பின்னர் மத்தூர், ஒசூர், டெங்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களுக்கு கீழ்க் கண்ட பொறுப்பாளர்கள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்தூர் கல்வி மாவட்டம்
1.   மாவட்டத் தலைவர்      :    சா. இராஜேந்திரன்,உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அத்திகானூர்
2.   மாவட்டச் செயலாளர்    :    செ. இராஜேந்திரன்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, ஜோதிநகர்.
3.   மாவட்டப் பொருளாளர்   :    த. செல்வம், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, அ.பள்ளத்தூர்
4. மாவட்ட மகளிர் அணி    :   பொ. கௌரம்மாள்,
பட்டதாரித் தலைமை ஆசிரியர் ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி.
5.   மாவட்ட து. தலைவர்    :    இரா.இராமாண்டவர்,
உதவி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி, கேத்துநாயக்கன்பட்டி
6. மாவட்ட து. செயலாளர்:  பா.ஜியாவுல்லா, உதவி ஆசிரியர், ஊ.ஒ.து.பள்ளி, மத்தூர்
7.   மாவட்ட தணிக்கைக் குழு :   சி. மாதையன், உதவி ஆசிரியர்,
                             ஊ.ஒ.து.பள்ளி, மாடற அள்ளி

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துக்கொண்ட மாநிலப் பொருளாளர் திரு க. சந்திரசேகர் அவர்கள் புதியதாக தேர்வு பெற்ற பொறுப்பாளர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து இயக்கப் பொறுப்பாளர்கள் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின்,  அகில இந்தியச் செயலாளர் திரு வா. அண்ணாமலை அவர்கள் சிறப்புப் பேருரை ஆற்றினார். அதில் அவர் ஆசிரியர் இயக்கங்களின் போராட்ட வரலாறு பற்றியும், இன்றைய ஆசிரியர்கள் பெற்று வரும் பல்வேறு உரிமைகள், கடந்த கால ஆசிரியப் போராளிகளின் தியாகத்தால் பெற்றுத் தந்தவை என்றும் கூறினார். மேலும் கல்வித் துறையின் இன்றைய இக்கட்டான சூழலில் ஆசிரியர்கள் அதிக விழிப்போடும், கடமை உணர்வோடும் பணியாற்ற வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
தேர்தலை தமிழக ஆசிரியர் கூட்டணியின், தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு இரா. சென்னகேசவன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் சேலம் ஊரகம் கல்வி மாவட்டத் தலைவர் திரு ச. மதியழகன் ஆகியோர் ஆணையாளர்களாக செயல்பட்டு நடத்தினர்.
நிகழ்வில் மத்துர், ஒசூர், தென்கனிக்கோட்டை கல்வி மாவட்டப் பொறுப்பாளர்களும், ஊத்தங்கரை, மத்தூர், ஒசூர், சூளகிரி, கெலமங்கலம், தளி வட்டாரப் பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டனர்.
     இறுதியில் ஒசூர் வட்டாரச் செயலாளர் திருமதி வே. அருள் எழிலரசி  அனைவருக்கும் நன்றி கூறினார்.


















No comments:

Post a Comment