Thursday, May 7, 2020

பள்ளி, கல்லுாரிகள் திறக்க ஐ.நா., அமைப்பு வழிகாட்டுதல் ....



நாடு முழுதும், கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் பள்ளி, கல்லுாரிகளை மீண்டும் திறப்பது குறித்து, யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி உள்ளிட்ட ஐ.நா.,வின் துணை அமைப்புகள், வழிகாட்டுதல்களை அளித்துள்ளன.கொரோனா தடுப்பு நடவடிக்கையின் முதல்கட்டமாக, நாடு முழுதும் உள்ள பள்ளி, கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், கடந்த மார்ச், 16ல் மூடப்பட்டன.

இதன் காரணமாக, உலகம் முழுவதும் உள்ள, 154 கோடி மாணவர்கள், பாதிக்கப்பட்டு உள்ளதாக, யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து, ஐ.நா.,வின் துணை அமைப்புகளான யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி மற்றும் உலக உணவு திட்டம் உள்ளிட்ட அமைப்புகள், சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன.அதன் விபரம்:பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால், உலகின் பெரும்பாலான மாணவர்களுக்கு, கல்வி மட்டுமல்லாமல், ஆரோக்கியம், ஊட்டசத்து மற்றும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளன.ஆனாலும், மாணவர்களின் நலன், பொது சுகாதார பாதுகாப்பு, சமூக பொருளாதார நிலை, கல்வி நிலையங்கள் திறப்பதில் உள்ள ஆபத்துகள் ஆகியவை ஆராயப்பட்டு, தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில், பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று கட்டுப்படுத்தபட்டு, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டவுடன், வகுப்பறைகளில் மாணவர்கள் அமர வைக்கப்படுவதில் மாற்றங்கள் செய்து, விடுதி மற்றும் கேன்டீன்கள், தனி மனித இடைவெளியை பின்பற்றக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment